சென்னை திரும்பினார் விஜய்! 'தளபதி 64' படப்பிடிப்பு எப்போது?
Send us your feedback to audioarticles@vaarta.com
விஜய் நடித்த 'பிகில்' திரைப்படத்தின் சமீபத்தில் முடிந்த நிலையில் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட விஜய், அதன்பின் வெளிநாட்டுக்கு ஓய்வு எடுக்க சென்றார். ஒருசில நாட்கள் மட்டும் ஓய்வு எடுத்த விஜய், தற்போது மீண்டும் சென்னை திரும்பியுள்ளார். விஜய் சென்னைக்கு திரும்பியதை உறுதி செய்யும் வகையில் சென்னை விமான நிலையத்தில் அவர் வந்து இறங்கிய வீடியோ காட்சி இணையதளங்களில் வைரலாகி வருகிறது
இதனை அடுத்து அக்டோபர் 2வது வாரத்தில் 'தளபதி 64' படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் 'தளபதி 64' படத்தின் படப்பிடிப்புக்கான லொகேஷன் தேடும் பணிகள் கிட்டத்தட்ட முடிந்து விட்டதாகவும், முதல் கட்ட படப்பிடிப்பு இராமேஸ்வரத்தில் நடக்க உள்ளதாகவும் செய்திகள் கசிந்துள்ளது
'தளபதி 64' படத்தில் விஜய்க்கு ஜோடியாக மாளவிகா மேனனும், வில்லனாக விஜய்சேதுபதியும் நடிக்க உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. அனிருத் இசையில் உருவாகும் இந்த படம் அடுத்த ஆண்டு கோடை விடுமுறையில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. லோகேஷ் கனகராஜ் இயக்கும் இந்த படம் அவரது முந்தைய படங்கள் போன்றே அதிரடி ஆக்சன் படமாக 'தளபதி 64' படம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது
Our Boss is arrived Chennai after his short Vacation. #Thalapathy64 shoot to start Oct 2nd week! ?? @TheVIJAY64Film pic.twitter.com/68VwDl0TkO
— #Thalapathy64 (@TheVIJAY64Film) September 30, 2019
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com