விஜய் வைத்த கோரிக்கை என்ன? தமிழக முதல்வர் விளக்கம்
- IndiaGlitz, [Tuesday,December 29 2020]
தளபதி விஜய் நடித்த ’மாஸ்டர்’ திரைப்படத்தின் அதிகாரபூர்வ ரிலீஸ் தேதி இன்று மதியம் 12.30 மணிக்கு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் சமீபத்தில் தமிழக முதல்வரை தளபதி விஜய் சந்தித்தார் என்றும் இந்த சந்திப்பின்போது அவர் ஒரு சில கோரிக்கைகளை முன்வைத்ததாகவும் கூறப்பட்டது
குறிப்பாக திரையரங்குகளில் தற்போது 50 சதவீத இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டிருக்கும் நிலையில் அது 100 சதவீதமாக மாற்றப்படவேண்டும் என்று விஜய் தரப்பில் இருந்து கோரிக்கை வைத்ததாக கூறப்பட்டது
இந்த நிலையில் இன்று கோவையில் செய்தியாளர்கள் சந்திப்பின்போது முதல்வர் இதுகுறித்து விளக்கமளித்தார். திரையரங்குகள் இன்னும் முழுமையாக திறக்கப்படவில்லை என்றும் அனைத்து திரையரங்குகளும் திறப்பதற்கு தமிழக அரசு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் விஜய் தன்னிடம் கேட்டுக்கொண்டதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். இதனை அடுத்து முதல்வரிடம் விஜய் வைத்த கோரிக்கை தற்போது தெரியவந்துள்ளது