பிரசாந்தின் 'அந்தகன்' படத்திற்காக விஜய் செய்ய போவது இதுதான்.. அதிரடி அறிவிப்பு..!

  • IndiaGlitz, [Monday,July 22 2024]

பிரசாந்த் நடித்த ‘அந்தகன்’ படத்தின் ப்ரோமோஷன் பணியில் விஜய் உதவி செய்ய இருப்பதாக வெளியான செய்தியையும் குறிப்பாக இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவில் விஜய் கலந்து கொள்ள இருப்பதாகவும் வெளியான செய்தியை நேற்று பார்த்தோம். இந்த நிலையில் ‘அந்தகன்’ படத்திற்காக விஜய் என்ன செய்யப் போகிறார் என்பதை சற்றுமுன் பட குழுவினர் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர்.

பிரசாத், சிம்ரன் நடிப்பில், தியாகராஜன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘அந்தகன்’ திரைப்படம் ஆகஸ்ட் 15ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து இந்த படத்தின் புரமோஷன் பணிகள் தொடங்கப்படும் நிலையில் ‘அந்தகன் ஆந்த்தம்’ பாடலை வரும் 24ஆம் தேதி தளபதி விஜய் வெளியிட இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த புகைப்படத்துடன் கூடிய அறிவிப்பு வெளியாகி உள்ள நிலையில், அந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

’கோட்’ படத்தின் படப்பிடிப்பின்போது விஜய் மற்றும் பிரசாந்த் ஆகிய இருவரும் நெருங்கிய நண்பர்களாகி விட்டதாகவும் அதன் அடிப்படையில்தான் பிரசாந்த் படத்தின் புரோமோஷனில் விஜய் ஈடுபட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

பிரசாந்த், சிம்ரன், கார்த்திக், பிரியா ஆனந்த், ஊர்வசி, யோகி பாபு, கேஎஸ் ரவிக்குமார், வனிதா விஜயகுமார், மனோபாலா உள்ளிட்ட பலர் நடித்த இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசை அமைத்துள்ளார்.

More News

இன்று நள்ளிரவு, நாளை காலை.. சூர்யா ரசிகர்களுக்கு டபுள் விருந்து.. சூப்பர் அறிவிப்புகள்..!

நடிகர் சூர்யா நாளை தனது  பிறந்தநாள் நாளை கொண்டாட இருக்கும் நிலையில் இன்று நள்ளிரவு மற்றும் நாளை காலை என இரண்டு சூப்பர் அப்டேட்டுகள் வெளியாக இருப்பதை அடுத்து சூர்யா ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளன.

பூஜை அறையில் கண்டிப்பாக இருக்க வேண்டிய பொருட்கள்

பிரபல ஜோதிடர் டாக்டர். தீபா அருளாளன் அவர்கள், யூடியூப் சேனல் ஆன்மீக கிளிக்ஸில் பூஜை அறை மற்றும் வாஸ்து சாஸ்திரம் குறித்து விரிவான தகவல்களைப் பகிர்ந்துள்ளார்.

ஒரு பக்கம் தலைவர் வீடு, இன்னொரு பக்கம் ஜெயலலிதா வீடு.. 16 வயதில் போட்ட விதை.. தனுஷ்..!

போயஸ் கார்டனில் ஒரு பக்கம் தலைவர் ரஜினிகாந்த் வீடு, இன்னொரு பக்கம் ஜெயலலிதா அம்மா வீட்டை 16 வயதில் பார்த்ததாகவும், அப்போதே இந்த போயஸ் கார்டனில் ஒரு வீடு வாங்க வேண்டும்

பா ரஞ்சித்தை அடுத்து திமுகவை எதிர்த்து களமிறங்குகிறாரா விஷால்.. அதிரடியாக கேட்ட ஒரு கேள்வி..!

சமீபத்தில் திமுகவை இயக்குனர் பா ரஞ்சித் கடுமையாக விமர்சனம் செய்து பேசியது பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் தற்போது திமுகவுக்கு எதிராக நடிகர் விஷாலும் பேட்டி அளித்திருப்பது மேலும் பரபரப்பை

வயக்காட்டு பம்புசெட்டில் ஜாலி குளியல் போட்ட அஞ்சனா ரங்கன்.. வைரல் வீடியோ..!

வயல் வெளியில் உள்ள பம்பு செட்டில் குளிப்பது என்பது ஒரு ஜாலியான அனுபவம் என்ற நிலையில் பிரபல தொகுப்பாளினி அஞ்சனா ரங்கன் வயல்வெளியில் பம்பு செட்டில் குளித்த வீடியோவை