பிரசாந்தின் 'அந்தகன்' படத்திற்காக விஜய் செய்ய போவது இதுதான்.. அதிரடி அறிவிப்பு..!
Send us your feedback to audioarticles@vaarta.com
பிரசாந்த் நடித்த ‘அந்தகன்’ படத்தின் ப்ரோமோஷன் பணியில் விஜய் உதவி செய்ய இருப்பதாக வெளியான செய்தியையும் குறிப்பாக இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவில் விஜய் கலந்து கொள்ள இருப்பதாகவும் வெளியான செய்தியை நேற்று பார்த்தோம். இந்த நிலையில் ‘அந்தகன்’ படத்திற்காக விஜய் என்ன செய்யப் போகிறார் என்பதை சற்றுமுன் பட குழுவினர் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர்.
பிரசாத், சிம்ரன் நடிப்பில், தியாகராஜன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘அந்தகன்’ திரைப்படம் ஆகஸ்ட் 15ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து இந்த படத்தின் புரமோஷன் பணிகள் தொடங்கப்படும் நிலையில் ‘அந்தகன் ஆந்த்தம்’ பாடலை வரும் 24ஆம் தேதி தளபதி விஜய் வெளியிட இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த புகைப்படத்துடன் கூடிய அறிவிப்பு வெளியாகி உள்ள நிலையில், அந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
’கோட்’ படத்தின் படப்பிடிப்பின்போது விஜய் மற்றும் பிரசாந்த் ஆகிய இருவரும் நெருங்கிய நண்பர்களாகி விட்டதாகவும் அதன் அடிப்படையில்தான் பிரசாந்த் படத்தின் புரோமோஷனில் விஜய் ஈடுபட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது.
பிரசாந்த், சிம்ரன், கார்த்திக், பிரியா ஆனந்த், ஊர்வசி, யோகி பாபு, கேஎஸ் ரவிக்குமார், வனிதா விஜயகுமார், மனோபாலா உள்ளிட்ட பலர் நடித்த இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசை அமைத்துள்ளார்.
THE ANDHAGAN ANTHEM to be launched by THE ONE AND ONLY #Thalapathy @actorvijay on 24th JULY ❤️🔥#Andhagan 🔥
— Sony Music South (@SonyMusicSouth) July 22, 2024
➡️ https://t.co/51JPBV0UT2
Visualised by @PDdancing 🕺🏼@actorprashanth @actorthiagaraja #Karthik @SimranbaggaOffc @PriyaAnand #AndhaganfromAug15… pic.twitter.com/MEoP0dDo1n
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com