close
Choose your channels

சிவகார்த்திகேயன் - ஏஆர் முருகதாஸ் படத்தில் இணைந்த இன்னொரு ஹீரோ.. விஜய் வாழ்த்து சொல்வாரா?

Saturday, June 15, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சிவகார்த்திகேயன் நடிப்பில், ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் உருவாகி வரும் ’எஸ்கே23’ திரைப்படத்தில் தமிழ் சினிமாவின் ஹீரோ ஒருவர் இணைந்துள்ளதை அடுத்து இந்த ஹீரோ விஜய்க்கு நெருங்கிய உறவினர் என்பதால் அவர் வாழ்த்து சொல்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நீண்ட இடைவேளைக்கு பிறகு ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் ‘ எஸ்கே23’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சிவகார்த்திகேயன் மற்றும் ருக்மணி வசந்த் ஆகிய இருவரும் நாயகன் நாயகியாக நடித்து வரும் இந்த படத்தில் வித்யூத் ஜம்வால், பிஜூ மேனன், சஞ்சய் உள்ளிட்டோர் நடித்து வருவதாக ஏற்கனவே செய்திகள் வெளியானது.

இந்த நிலையில் தற்போது இந்த படத்தில் நடிகர் விக்ராந்த் இணைந்துள்ளதாக இன்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே இவர் பல படங்களில் ஹீரோவாகவும் ஒரு சில படங்களில் வில்லனாகவும் நடித்த நிலையில் இந்த படத்தில் அவர் முக்கிய கேரக்டரில் நடிக்கிறாரா அல்லது வில்லனாக நடிக்கிறாரா எந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

நடிகர் விக்ராந்த், தளபதி விஜய்யின் நெருங்கிய உறவினர் என்பதால் அவருக்கு விஜய்யிடம் இருந்து வாழ்த்து கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மொத்தத்தில் ’எஸ்கே23’ படத்தில் இணையும் நட்சத்திரங்கள் குறித்த தகவல் அந்த படத்தின் எதிர்பார்ப்பை அதிகரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

அனிருத் இசையில், சுதீப் மேனன் ஒளிப்பதிவில், ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பில் உருவாகி வரும் இந்த படத்தை லட்சுமி மூவீஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்த படம் தமிழ் உள்பட பான் இந்திய மொழிகளில் சுமார் 200 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாகி வருவதாக கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment