'நான் சிரித்தால்' டிரைலரை பார்த்து தளபதி விஜய் கூறிய கமெண்ட்!
Send us your feedback to audioarticles@vaarta.com
ஹிப் ஹாப் தமிழா ஆதி நடித்த ’நான் சிரித்தால்’ என்ற திரைப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தின் நாயகன் ஆதிக்கு சிரிக்கும் வியாதி இருப்பதால் அந்த வியாதி காரணமாக அவர் சீரியஸான நேரத்திலும் சிரிக்கும் வகையில் இந்த படத்தின் கதை அமைந்துள்ளது.
குறிப்பாக இந்த படத்தின் டிரைலரில் விஜய் நடித்த ’மெர்சல்’ திரைப்படம் திரையரங்கில் ஓடிக் கொண்டிருக்கும் போது அந்த படத்தை பார்க்கும் ஆதி, அதில் வரும் ஒரு எமோஷன் காட்சியில் விஜய் அழுது கொண்டே நடித்த போது அவருக்கு இருக்கும் சிரிக்கும் நோயால் சிரிப்பது போன்றும் அதனால் படம் பார்ப்பவர்கள் அவரை வினோதமாக பார்ப்பது போன்றும் ஒரு காட்சி உள்ளது.
இந்த நிலையில் சமீபத்தில் இந்த படத்தின் டிரைலரை பார்த்த தளபதி விஜய் இந்த டிரைலர் குறித்து கூறியபோது, ‘சமீப நாட்களில் நான் பார்த்து மிகவும் என்ஜாய் செய்த டிரைலர்களில் ஒன்று ‘நான் சிரித்தால்’ படத்தின் டிரைலர் என்று கூறியுள்ளார். விஜய்யின் இந்த கருத்து அவருடைய பெருந்தன்மையை காட்டுவதாக நெட்டிசன்கள் கருத்து கூறி வருகின்றனர்.
#ThalapathyVijay @actorvijay - "Recent days la naan paathu romba enjoy panna trailer #NaanSirithal.. Romba pudichathu"
— Think Music (@thinkmusicindia) January 7, 2020
Have you checked out this @hiphoptamizha Trailer ?https://t.co/J1pxwMkjV5#NaanSirithalFromFeb14 @avnigroups #SundarC #HHT3 @ishmenon @the_raana @Rockfortent
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com