கேரளாவில் 200 திரையரங்குகளில் 'புலி' ரிலீஸ்

  • IndiaGlitz, [Monday,September 28 2015]

விஜய்யின் படங்களுக்கு தமிழகத்தில் எந்த அளவுக்கு வரவேற்பு இருக்கின்றதோ அதற்கு கொஞ்சமும் குறைவில்லாமல் கேரளாவிலும் மாபெரும் ஓப்பனிங் இருக்கும் என்பது அனைவரும் தெரிந்ததே. விஜய்யின் துப்பாக்கி, ஜில்லா, கத்தி ஆகிய படங்கள் கேரளாவில் அதிகளவிலான தியேட்டர்களில் ரிலீஸ் ஆனது. குறிப்பாக மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லாலுடன் விஜய் நடித்த 'ஜில்லா' திரைப்படம் கேரளாவில் 207 திரையரங்குகளில் வெளியானதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் மலையாள சூப்பர் ஸ்டார் இல்லாமல் விஜய்க்காகவே 'புலி' திரைப்படம் கேரளாவில் 200 திரையரங்குகளில் ரிலீஸ் ஆகவுள்ளதாக கூறப்படுகிறது. கேரளாவில் ரிலீஸ் ஆகவுள்ள தியேட்டர்களின் எண்ணிக்கை மற்றும் தியேட்டர்களின் விவரங்கள் இணையதளத்தில் வெளிவந்துள்ளது.

விஜய் படங்களை தவிர இதே கேரளாவில் 200 திரையரங்குகளுக்கு மேல் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'லிங்கா', மற்றும் ஷங்கரின் 'ஐ' ஆகிய படங்கள் ரிலீஸ் ஆகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ் படங்கள் தமிழகத்தில் மட்டுமின்றி அண்டை மாநிலங்களிலும் பெருவாரியான தியேட்டர்களில் ரிலீஸ் ஆவது கோலிவுட் ஆரோக்கியமான பாதையை நோக்கி செல்வதையே காட்டுகிறது.

More News

'புலி' படத்தை பார்த்து ஸ்ரீதேவி அதிருப்தி அடைந்தாரா? சிம்புதேவன் மறுப்பு

விஜய் நடித்த 'புலி' திரைப்படம் வரும் அக்டோபர் 1ஆம் தேதி உலகம் முழுவதும் பிரமாண்டமாக ரிலீஸாகவுள்ள நிலையில்

மாறுவேடத்தில் ஆண்டாளை தரிசித்த விஜய்?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தன்னுடைய ஒவ்வொரு படத்தின் ரிலீஸுக்கு முன்னர் திருப்பதி சென்று வருவதைபோல இளையதளபதி விஜய்யும்...

பிரபல தெலுங்கு இயக்குனரின் 'ருத்ராக்ஷா'வில் நயன்தாரா?

கோலிவுட் திரையுலகின் லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் நயன்தாரா பெயருக்கேற்றவாறு...

ரஜினிக்கு அடுத்த இடத்தில் அஜீத். பிரபல தயாரிப்பாளர் கருத்து

அடுத்த சூப்பர் ஸ்டார் யார் என பல ஊடகங்கள் அவ்வப்போது பல கருத்துக்கணிப்புகள் எடுத்து பரபரப்பை ஏற்படுத்தி கொண்டிருப்பதை பார்த்து வருகிறோம்...

விஜய்யின் 'புலி'யுடன் இணைந்த விக்ரமின் '10 எண்றதுக்குள்ள'

இளையதளபதி விஜய் நடித்த 'புலி' திரைப்படம் இன்னும் வரும் அக்டோபர் 1ஆம் தேதி உலகம் முழுவதும் பிரமாண்டமாக ரிலீஸ் செய்ய ...