5வது வருடத்தில் 50வது படமாகும் விஜய்யின் 'புலி'

  • IndiaGlitz, [Thursday,September 10 2015]

அமெரிக்காவில் தமிழ் படங்களை ரிலீஸ் செய்யும் விநியோக நிறுவனங்களில் ஒன்று ATMUS Entertainment. இந்த நிறுவனம் கடந்த ஐந்து வருடங்களாக பல தமிழ் திரைப்படங்களை ரிலீஸ் செய்து வருகிறது. சமீபத்தில் உலகம் முழுவதும் சூப்பர் ஹிட் ஆகிய ஜெயம் சகோதரர்களின் 'தனி ஒருவன்' திரைப்படத்தை அமெரிக்காவில் இந்த நிறுவனம்தான் ரிலீஸ் செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.


இந்நிலையில் வரும் அக்டோபர் 1ஆம் தேதி விஜய் நடித்த 'புலி' படத்தையும் அமெரிக்காவில் இந்த நிறுவனம்தான் ரிலீஸ் செய்யவுள்ளது. மேலும் இந்த நிறுவனம் அமெரிக்காவில் ரிலீஸ் செய்யும் 50வது படம் 'புலி' என்பது தற்போது தெரிய வந்துள்ளது. ஐந்தாவது வருடத்தில் காலடி எடுத்து வைத்துள்ள இந்த நிறுவனம் ரிலீஸ் செய்யும் 50வது படம் என்ற சிறப்பை 'புலி' பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் ATMUS Entertainment ரிலீஸ் செய்த 'தனி ஒருவன்' திரைப்படம் தொடர்ந்து மூன்றாவது வாரமாக நல்ல வசூலுடன் ஓடிக்கொண்டிருப்பதாகவும், விரைவில் $250,000 வசூலை இந்த படம் பெற்றுவிடும் என்று எதிர்ப்பார்ப்பதாகவும் இந்த நிறுவனத்தின் அதிகாரபூர்வ சமூக வலைத்தளத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

More News

தேர்தலுக்கு மறுநாள் இரு அணிகளும் இணைந்துவிடும். விஷால்

தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் அக்டோபர் 18 என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டதை அடுத்து சரத்குமார் மற்றும் விஷால்...

உதயநிதி படத்தின் மூன்றாவது ஹீரோயின்?

இயக்குனர் திருக்குமரன் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடித்த 'கெத்து' திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிட்ட நிலையில் தற்போது அவர் 'ஜாலி எல்.எல்.பி'...

நடிகர் சந்தானம் வளர்க்கும் தாடியின் ரகசியம்?

கடந்த சில வருடங்களாக காமெடி நடிகர்களில் முன்னணி இடத்தில் இருந்து வந்த நடிகர் சந்தானம், 'இனிமே இப்படித்தான்'...

கமல்ஹாசனை அடுத்து 'த்ரிஷ்யம்' இயக்குனர் தேர்வு செய்த பிரபல நடிகர்

சிறிய மாநிலமான கேரளாவில் சுமார் ரூ.5 கோடியில் எடுக்கப்பட்ட ஒரு சின்ன பட்ஜெட் படமான 'த்ரிஷ்யம்' இந்தியாவையே திரும்பி பார்க்க வைத்தது...

ஹீரோயின் இல்லாமல் நடிக்கும் ரொமான்ஸ் நாயகன்?

வளர்ந்து வரும் இளையதலைமுறை நடிகர்களில் ஒருவரான சித்தார்த் நடித்த 'எனக்குள் ஒருவன்' படத்திற்கு பின்னர் அவர் நடித்துள்ள 'ஜில் ஜங் ஜக்'...