ஆகஸ்ட் 15-ல் தல-தளபதி படங்களின் முக்கிய அறிவிப்பு

  • IndiaGlitz, [Friday,August 07 2015]

அஜீத் நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கி வரும் படத்தின் டைட்டில் முடிவு செய்யப்பட்டுவிட்டதாகவும், இந்த டைட்டிலை வரும் ஆகஸ்ட் 15ஆம் தேதி படக்குழுவினர் அதிகாரபூர்வமாக அறிவிக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன.


'தல 56' படத்திற்கு 'வெட்டி விலாஸ்' என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாக கடந்த இரண்டு நாட்களாக சமூக இணையதளங்களில் செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. ஆனால் இந்த டைட்டிலை படக்குழுவினர் உறுதிப்படுத்தவில்லை. இந்நிலையில் வரும் ஆகஸ்ட் 15ஆம் தேதி படத்தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னம், அதிகாரபூர்வ டைட்டிலை அறிவிப்பார் என கூறப்படுகிறது.

ஏற்கனவே விஜய்யின் 'புலி' படத்தின் டிரைலர் ஆகஸ்ட் 15ஆம் தேதி வெளிவரும் என கூறப்பட்டு வரும் நிலையில், அதே நாளில் அஜீத் படத்தின் டைட்டில் அறிவிப்பும் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுவதால் அஜீத்-விஜய் ரசிகர்களிடையே அன்றையை தினம் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

More News

மூன்றே வருடங்களில் 'வித்யூலேகா ராமன்' செய்த சாதனை

கவுதம் மேனன் இயக்கத்தில் ஜீவா, சமந்தா நடிப்பில் வெளிவந்த "நீதானே என் பொன்வசந்தம்' படத்தில் நகைச்சுவை நடிகையாக அறிமுகமான வித்யூலேகா ராமன்,..

புறம்போக்கு நாயகியின் புதிய ஆபரேஷன் ஆரம்பம்

தமிழகம் முழுவதும் கடந்த ஜூலை மாதம் 1ஆம் தேதி முதல் இருசக்கர வாகன ஓட்டிகள் ஹெல்மெட் கட்டாயம் அணிய வேண்டும்...

பாலா-சற்குணம்-அதர்வா இணைந்த 'சண்டிவீரன்'. ஒரு முன்னோட்டம்

தேசிய விருது பெற்ற இயக்குனர் பாலாவின் தயாரிப்பில், தேசிய விருது பெற்ற 'வாகை சூடவா' படத்தை இயக்கிய சற்குணம் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'சண்டிவீரன்....

கார்த்தி-நாகார்ஜூனா பட டைட்டில் குறித்த முக்கிய அறிவிப்பு

கார்த்தி, நாகார்ஜூனா முதல்முறையாக இணைந்து நடிக்கும் திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரண்டு...

தயாரிப்பாளராக மாறினார் ஸ்ருதிஹாசன்

உலக நாயகன் கமல்ஹாசன் நடிகராக மட்டுமின்றி ஒரு வெற்றி பெற்ற தயாரிப்பாளராகவும் இருந்து வருகிறார். அவரது ராஜ்கமல்...