நியூசிலாந்தில் 'புலி' செய்த சாதனை

  • IndiaGlitz, [Tuesday,September 22 2015]

இளையதளபதி விஜய் நடித்துள்ள 'புலி' திரைப்படம் வரும் அக்டோபர் 1ஆம் தேதி உலகம் முழுவதும் வெளிவருகிறது என்பது அனைவரும் அறிந்ததே. இந்நிலையில் இந்த படம் தமிழகத்தில், இந்தியாவில் மட்டுமின்றி உலகின் பல நாடுகளிலும் அதிகளவிலான தியேட்டர்களில் ரிலீஸ் ஆகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


குறிப்பாக நியூசிலாந்து நாட்டில் ஒரு தமிழ்ப்படம் நான்கு தியேட்டர்களில் முதன்முதலாக ரிலீஸ் ஆனது ஷங்கரின் 'இ' திரைப்படம்தான். இந்த திரைப்படத்தின் சாதனையை தற்போது 'புலி' சமன் செய்துள்ளது. 'புலி திரைப்படம் நியூசிலாந்தில் ஆக்லாந்து, ஹாமில்டன், தலைநகர் வெல்லிங்டன் மற்றும் கிறிஸ்ட்சர்ச் ஆகிய நகரங்களில் ரிலீஸாகவுள்ளது. அனைத்து நகரங்களிலும் ஆங்கில சப்டைட்டிலுடன் இந்த படம் ரிலீஸ் ஆவதால், நியூசிலாந்தில் வாழும் தமிழர்கள் மட்டுமின்றி அனைவரும் இந்த படத்தை பார்க்க வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும்'புலி' திரைப்படம் பிரிட்டனில் 60 திரையரங்குகள், பிரான்ஸில் 35 திரையரங்குகள், ஜெர்மனியில் 5 திரையரங்குகள், டென்மார்க்கில் 18 திரையரங்குகள், ஹாலந்தில் 7 திரையரங்குகள், மற்றும் சுவிட்சர்லாந்தில் 15 திரையரங்குகளில் ரிலீஸ் ஆகவுள்ளதாகவும், இந்த எண்ணிக்கை ரிலீஸ் தேதி நெருங்கும்போது மேலும் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

More News

21 வயது இளைஞரின் இயக்கத்தில் முதன்முதலாக ரகுமான்

கடந்த 2000ஆம் ஆண்டுகளில் பிரபலமாக இருந்த நடிகர்களில் ஒருவர் ரகுமான். புதுப்புது அர்த்தங்கள்...

'டார்லிங் II' ஆக மாறிய 'ஜின்'

மெட்ராஸ்' பட புகழ் கலையரசன் முக்கிய வேடத்தில் நடித்த 'ஜின்' திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்தது...

சிவகார்த்திகேயனுடன் ஜோடி சேர்வதில் ஸ்ருதிஹாசனுக்கு சிக்கலா?

நேற்று முன் தினம் மதுரை விமான நிலையத்தில் ஒருசில மர்ம நபர்களால் சிவகார்த்திகேயன் தாக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில்...

'தல 56' திரைப்படத்தில் அஜீத்துக்கு 3 கெட்டப்?

'வீரம்' சிவா இயக்கத்தில் அஜீத் நடித்து வரும் 'தல 56' திரைப்படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட நிறைவடையும் நிலையில் உள்ளது...

விஜய்யின் மின்னல்வேக வாள்சண்டை. அதிசயிக்கும் புலி படக்குழுவினர்

இளையதளபதி விஜய் நடித்து வரும் 'புலி' படத்தின் ரிலீஸ் தேதி நெருங்கிவிட்டதால் விஜய் ரசிகர்களின் நாடித்துடிப்பும் அதிகரித்து கொண்டே போகிறது...