நியூசிலாந்தில் 'புலி' செய்த சாதனை
- IndiaGlitz, [Tuesday,September 22 2015]
இளையதளபதி விஜய் நடித்துள்ள 'புலி' திரைப்படம் வரும் அக்டோபர் 1ஆம் தேதி உலகம் முழுவதும் வெளிவருகிறது என்பது அனைவரும் அறிந்ததே. இந்நிலையில் இந்த படம் தமிழகத்தில், இந்தியாவில் மட்டுமின்றி உலகின் பல நாடுகளிலும் அதிகளவிலான தியேட்டர்களில் ரிலீஸ் ஆகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
குறிப்பாக நியூசிலாந்து நாட்டில் ஒரு தமிழ்ப்படம் நான்கு தியேட்டர்களில் முதன்முதலாக ரிலீஸ் ஆனது ஷங்கரின் 'இ' திரைப்படம்தான். இந்த திரைப்படத்தின் சாதனையை தற்போது 'புலி' சமன் செய்துள்ளது. 'புலி திரைப்படம் நியூசிலாந்தில் ஆக்லாந்து, ஹாமில்டன், தலைநகர் வெல்லிங்டன் மற்றும் கிறிஸ்ட்சர்ச் ஆகிய நகரங்களில் ரிலீஸாகவுள்ளது. அனைத்து நகரங்களிலும் ஆங்கில சப்டைட்டிலுடன் இந்த படம் ரிலீஸ் ஆவதால், நியூசிலாந்தில் வாழும் தமிழர்கள் மட்டுமின்றி அனைவரும் இந்த படத்தை பார்க்க வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும்'புலி' திரைப்படம் பிரிட்டனில் 60 திரையரங்குகள், பிரான்ஸில் 35 திரையரங்குகள், ஜெர்மனியில் 5 திரையரங்குகள், டென்மார்க்கில் 18 திரையரங்குகள், ஹாலந்தில் 7 திரையரங்குகள், மற்றும் சுவிட்சர்லாந்தில் 15 திரையரங்குகளில் ரிலீஸ் ஆகவுள்ளதாகவும், இந்த எண்ணிக்கை ரிலீஸ் தேதி நெருங்கும்போது மேலும் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.