சீனா, ஜப்பானில் ரிலீஸ் ஆகின்றதா 'புலி'?
- IndiaGlitz, [Saturday,September 26 2015]
இளையதளபதி விஜய் நடித்துள்ள 'புலி' திரைப்படம் குறித்து ஒவ்வொரு நாளும் புதுப்புது செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றது. தற்போது வந்த புதிய தகவலின்படி 'புலி' திரைப்படம் ஜப்பான் மற்றும் சீன மொழிகளிலும் டப் செய்யப்பட்டு இரு நாடுகளிலும் வெளியாகவுள்ளதாக கூறப்படுகிறது. இந்த தகவல் உறுதியானால், கண்டிப்பாக விஜய்யின் திரையுலக வாழ்வில் இந்த படம் அவருக்கு மிகப்பெரிய கெளரவத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
விஜய்யின் 'புலி' ஒரு ஃபேண்டஸி எண்டர்டெயின்மெண்ட் படம் என்பதால் உலகம் முழுவதும் நாடு, மொழி, இனம், தாண்டி அனைவரும் ரசிக்கத்தக்க வகையில் உருவாக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. எனவே தமிழ், தெலுங்கு, இந்தி, மொழிகளுடன் சீன, ஜப்பானிய மொழிகளிலும் இந்த படம் வெளியானால் ஹாலிவுட் படங்களுக்கு இணையான வசூலை பெறும் என்று கூறப்படுகிறது.
ஏற்கனவே 'புலி' திரைப்படம் ரிலீஸாகும் தியேட்டர்களின் எண்ணிக்கை 3000ஐ நெருங்கி வரும் நிலையில் சீனாவிலும், ஜப்பானிலும் வெளியானால், 3000 திரையரங்குகளை தாண்டிவிடும் என்றும் கூறப்படுகிறது.