'புலி' வியாபாரம் குறித்து புதிய சுவாரஸ்ய தகவல்

  • IndiaGlitz, [Friday,September 25 2015]

இளையதளபதி விஜய் நடிப்பில் சிம்புதேவன் இயக்கிய 'புலி' படத்தின் அனைத்து ஏரியாவின் உரிமைகளும் விற்பனையாகி கிட்டத்தட்ட தமிழகம் முழுவதும் ரீலீஸாகும் தியேட்டர்களும் உறுதி செய்யப்பட்டு நேற்று முதல் முன்பதிவும் தொடங்கிவிட்டது. இந்நிலையில் 'புலி' திரைப்படம் தமிழகத்தில் ஒவ்வொரு ஏரியாவிலும் என்ன விலைக்கு விற்பனை ஆகியுள்ளது என்பது குறித்த தகவல்கள் தற்போது வெளிவந்துள்ளது.

'புலி' திரைப்படத்தின் சென்னை சிட்டி உரிமை ரூ.7.15 கோடி, செங்கல்பட்டு 8 கோடி, திருச்சி 4.50 கோடி, சேலம் 3.5 கோடி, மதுரை 6 கோடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி 3,25 கோடி, NSC ஏரியா 6 கோடி என தமிழகத்தின் உரிமை மட்டுமே சுமார் ரூ.40 கோடிக்கு விலை போயுள்ளதாக கூறப்படுகிறது. இதுபோக வெளிநாட்டு உரிமை, சாட்டிலைட், தெலுங்கு-இந்தி உள்பட பிறமொழி உரிமை என 'புலி'யின் மொத்த வியாபாரம் சுமார் 100 கோடியை தாண்டிவிட்டதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

இந்த படத்தின் பட்ஜெட்டே ரூ.100 கோடிக்கும் அதிகம் என்பதால் 'புலி' ரிலீஸ் உரிமை அதிக விலைக்கு விற்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

More News

அமெரிக்கா, கனடாவில் 'புலி' செய்த புதிய சாதனை

இளையதளபதி விஜய் நடித்த 'புலி' திரைப்படம் ரிலீஸ் ஆவதற்கு முன்பே பல்வேறு சாதனைகளை உடைத்து வருகிறது....

'தனி ஒருவன்' ராஜாவுக்கு ஷங்கர் பாராட்டு

சமீபத்தில் வெளியான மிகப்பெரிய வெற்றி படங்களில் ஒன்று ஜெயம் சகோதரர்களின் 'தனி ஒருவன். பெரிய எதிர்பார்ப்பின்றி வெளியான இந்த படம் பாக்ஸ்..

மம்முட்டியுடன் நடிக்கும் நயன்தாராவின் கேரக்டர்

லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் நடிகை நயன்தாரா தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் பிசியாக முன்னணி இடத்தில் இருந்தாலும்...

10 நாடுகள். 3,000 திரையரங்குகள். 'புலி'யின் பிரமாண்ட ஓப்பனிங்

இளையதளபதி விஜய் நடித்துள்ள 'புலி' திரைப்படம் வரும் அக்டோபர் 1ஆம் தேதி உலகம் முழுவதும் ரிலீஸாகவுள்ளது...

'கபாலி'யில் தன்ஷிகாவின் வித்தியாசமான லுக்?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் 'கபாலி' படத்தின் படப்பிடிப்பு சென்னையில் மிக விறுவிறுப்பாக நடந்து வருகிறது என்பதை ஏற்கனவே பார்த்தோம்...