3D-யில் விஜய்யின் 'புலி'?
Send us your feedback to audioarticles@vaarta.com
இளையதளபதி விஜய் நடித்து முடித்துள்ள 'புலி' திரைப்படத்தின் படப்பிடிப்புகள் முடிவடைந்து சென்சாரும் செய்யப்பட்டது என்பதை ஏற்கனவே பார்த்தோம். இந்த படம் வரும் அக்டோபர் 1ஆம் தேதி உலகம் முழுவதும் பிரமாண்டமாக ரிலீஸ் ஆகவுள்ளது. இந்நிலையில் இந்த படத்தின் டிரைலர் இந்தியாவிலேயே அதிகம் பார்க்கப்பட்ட படத்தின் டிரைலர் என்ற பெருமையை பெற்றுள்ளதால் படத்திற்கு ஏற்பட்டுள்ள எதிர்பார்ப்பு பல மடங்காக பெருகியுள்ளது.
மேலும் 'புலி' திரைப்படம் குழந்தைகள் விரும்பி பார்க்கும் ஃபேண்டஸி படம் என்பதால் குழந்தைகளுக்கு மேலும் உற்சாகம் அளிக்கும் வகையில் ஒருசில திரையரங்குகளில் மட்டும் 3Dயில் இந்த படத்தை வெளியிட தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்துள்ளதாகவும், குறிப்பிட்ட சில எண்ணிக்கையில் 3D பிரிண்ட் போட பணிகள் நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. அரசர் காலத்து பிரமாண்ட அரண்மனை, அதிர வைக்கும் வாள் சண்டைக்காட்சிகள் ஆகியவைகளை 3Dயில் பார்த்தால் குழந்தைகள் பெரிதும் மகிழ்ச்சி அடைவார்கள் என்பதே தயாரிப்பு நிறுவனத்தின் எண்ணமாக உள்ளது என தெரிகிறது.
இந்நிலையில் சல்மான்கானின் 'கிக்' பட லைக்குகளைவிட 'புலி' படத்தின் லைக்குகள் அதிகமானதை சமூக வலைத்தளத்தில் விஜய் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். #PuliMostLikedIndianTrailer என்ற ஹேஷ்டேக் உலக அளவில் டிரெண்டாகி உள்ளது. மேலும் 'கிக்' பட டிரைலர் 1,01,831 லைக்குகளை இரண்டு வருடங்களில் பெற்றதாகவும், ஆனால் விஜய்யின் 'புலி' அதே 1,01,831 லைக்குகளை ஒரே மாதத்தில் பெற்றதாகவும் விஜய் ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் பதிவு செய்து வருகின்றனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Contact at support@indiaglitz.com