10 நாடுகள். 3,000 திரையரங்குகள். 'புலி'யின் பிரமாண்ட ஓப்பனிங்
- IndiaGlitz, [Friday,September 25 2015]
இளையதளபதி விஜய் நடித்துள்ள 'புலி' திரைப்படம் வரும் அக்டோபர் 1ஆம் தேதி உலகம் முழுவதும் ரிலீஸாகவுள்ளது. இதுவரை இல்லாத அளவில் உலகில் மிக அதிகளவு தியேட்டர்களில் ரிலீஸாகும் விஜய் படம் இதுதான் என்று கூறப்படும் நிலையில் 'புலி' திரைப்படம் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் மொத்தம் 3,000 திரையரங்குகளில் வெளியாகவுள்ளதாக கூறப்படுகிறது.
விஜய்யின் திரையுலக வரலாற்றில் அவர் நடித்த திரைப்படம் ஒன்று 10 நாடுகளில் 3,000 திரையரங்குகளில் ரிலீஸாவது இதுதான் முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது. பிரிட்டனில் இந்த படம், 58 தியேட்டர்களில் ரிலீஸ் ஆகவுள்ளது. ரிலீஸ் தேதி நெருங்கும்போது இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. பிரிட்டனில் இவ்வளவு அதிக ஸ்கிரீன்களில் விஜய் படம் வெளியாவதும் இதுவே முதல்முறை.
மேலும் சென்னையில் உள்ள மாயாஜால் காம்ப்ளக்ஸில் தினமும் 48 காட்சிகளுக்கு புக்கிங் நடந்து வருகிறது. இன்னும் காட்சிகள் அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது. தற்போது வந்துள்ள தகவலின்படி அக்டோபர் 8வரை சென்னையில் உள்ள முக்கிய திரையரங்குகளில் 'புலி' படத்தின் டிக்கெட்டுக்கள் விற்று தீர்ந்துவிட்டதாக கூறப்படுகிறது. எனவே 'புலி'யின் ஓப்பனிங் வசூல் இதுவரை இல்லாத அளவில் மிகப் பிரமாண்டமாகவும், வசூலில் புதிய சாதனையை ஏற்படுத்தும் வகையில் இருக்கும் என்றும் கூறப்படுகிறது.