'புலி' படத்தின் முதல்வார வசூல். SKT Studios நிறுவனம் தகவல்

  • IndiaGlitz, [Wednesday,October 14 2015]

இளையதளபதி விஜய் நடித்த 'புலி' படத்திற்கு ஒருசில ஊடகங்கள் நெகட்டிவ் விமர்சனங்களை கொடுத்த போதிலும், இந்த படத்திற்கு குழந்தைகள் மற்றும் குடும்ப ஆடியன்ஸ்கள் தொடர்ந்து வந்து கொண்டிருந்ததாக கூறப்பட்டது. மேலும் ஒருசில பள்ளி நிர்வாகிகளே தங்கள் பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவியர்களை மொத்தமாக 'புலி' படத்தை பார்க்க அழைத்து வந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இருப்பினும் 'புலி' படத்தின் வசூல் மிகவும் குறைவானதே என்று வதந்திகள் கிளம்பியவாறு இருந்தது. இந்நிலையில் இந்த படத்தின் தயாரிப்பு நிறுவனமான SKT Studios நிறுவனம் இந்த படத்தின் வசூல் குறித்து முதன்முதலாக தனது சமூக வலைத்தள பக்கத்தில் அதிகாரபூர்வமாக தெரிவித்துள்ளது.

உலகம் முழுவதும்'புலி' திரைப்படத்தின் முதல்வார வசூல் ரூ.71 கோடி என SKT Studios நிறுவனம் அறிவித்துள்ளது. இரண்டாவது வார வசூல் குறித்த விவரங்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தகவலுக்கு பிறகாவது 'புலி' படத்தின் வசூல் குறித்த வதந்தி சமூக வலைத்தளங்களில் பரவுவது நிற்குமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

More News

அஜீத்தின் 'வேதாளம்' படத்தில் பாலிவுட் பாட்ஷா

தல அஜித் நடித்துள்ள 'வேதாளம்' படத்தின் 'தரலோக்கல்' ஆடியோ டீசர் இன்னும் சற்று நேரத்தில் வெளிவரவுள்ள நிலையில் இந்த படத்தில் பாலிவுட் பாட்ஷா...

காமெடி நடிப்பில் விஜய்யை அசத்திய மொட்டை ராஜேந்திரன்

ஆரம்ப காலகட்டத்தில் வில்லனுக்கு அடியாளாக, பின்னர் மெயின் வில்லன் மற்றும் காமெடி வேடங்களில் நடித்து வரும் மொட்டை ராஜேந்திரனுக்கு 'விஜய் 59' திரைப்படம் ஒரு மறக்க முடியாத படமாக அமையும் என கூறப்படுகிறது.....

'தெறிக்க விடலாமா' டீசரை அடுத்து 'தரலோக்கல்' டீசர்

தல அஜீத் நடித்த 'வேதாளம்' படத்தின் டீசர் மற்றும் போஸ்டர்கள் கடந்த வாரம் வெளியாகி சமூக இணையதளங்களில் பெரும் சுனாமியை ஏற்படுத்திய பரபரப்பே இன்னும் அடங்காத நிலையில் இன்று இரவு ஏழு மணிக்கு இந்த படத்தின் ஆடியோ டீசர் வெளியாகவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.....

'கான்' பட வதந்திக்கு செல்வராகவன் முற்றுப்புள்ளி

சிம்பு, கேதரீன் தெரசா நடித்து வரும் 'கான்' திரைப்படத்தை இயக்குனர் செல்வராகவன் இயக்கி வந்த நிலையில் இன்று காலை முதல் இந்த படம் டிராப் ஆகிவிட்டதாக இணையதளங்களிலும்...

பிரித்விராஜ் நடிக்கும் மலையாள படத்தில் 'துப்பாக்கி' விஜய்?

மணிரத்னம் இயக்கிய 'ராவணன்', வசந்தபாலன் இயக்கிய 'காவியத்தலைவன்' உள்பட பல தமிழ் படங்களிலும் ஏராளமான மலையாள படங்களிலும் நடித்துள்ள நடிகர் பிரித்விராஜ்...