அமெரிக்கா, கனடாவில் 'புலி' செய்த புதிய சாதனை

  • IndiaGlitz, [Friday,September 25 2015]

இளையதளபதி விஜய் நடித்த 'புலி' திரைப்படம் ரிலீஸ் ஆவதற்கு முன்பே பல்வேறு சாதனைகளை உடைத்து வருகிறது. இந்த திரைப்படம் பிரிட்டனில் 'ஐ' படத்தை விட அதிகளவிலான தியேட்டரில் ரிலீஸ் ஆகவுள்ளதை ஏற்கனவே பார்த்தோம். இந்நிலையில் அமெரிக்கா மற்றும் கனடாவிலும் இந்த படம் புதிய சாதனையை செய்யவுள்ளதாக கூறப்படுகிறது.

ஷங்கரின் பிரமாண்ட திரைப்படமான 'ஐ' திரைப்படம் அமெரிக்காவில் 157 திரையரங்குகளில் ரிலீஸ் ஆனது. விஜய்யின் 'புலி' படத்தின் தமிழ் பதிப்புற்கு மட்டும் அமெரிகாவில் தற்போது 110க்கும் அதிகமான திரையரங்குகள் புக் ஆகியுள்ளது. 'புலி'யின் தெலுங்கு மற்றும் இந்தி பதிப்புகள் வெளியாகும் தியேட்டர்களின் எண்ணிக்கையை சேர்த்தால் 160க்கும் அதிகமான தியேட்டர்களில் 'புலி' ரிலீசாகும் என கூறப்படுகிறது.

மேலும் கனடாவில், இதுவரை வெளியான தமிழ்ப்படங்களில் அதிகளவிலான தியேட்டர்களில் வெளியான படம் சூப்பர் ஸ்டார் ரஜினியின் கோச்சடையான். இந்த படம் கனடாவில் 16 திரையரங்குகளில் வெளியானது. ஆனால் விஜய்யின் 'புலி'க்கு இதுவரை 18 திரையரங்குகள் புக் ஆகியுள்ளது. இந்த எண்ணிக்கை இன்னும் ஓரிரு நாளில் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது.

உலக அளவில் 'புலி' திரைப்படம் இப்போதே பல சாதனைகளை செய்து வரும் நிலையில் ரிலீஸுக்கு பின்னர் என்னென்ன சாதனைகளை செய்யப்போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

More News

'தனி ஒருவன்' ராஜாவுக்கு ஷங்கர் பாராட்டு

சமீபத்தில் வெளியான மிகப்பெரிய வெற்றி படங்களில் ஒன்று ஜெயம் சகோதரர்களின் 'தனி ஒருவன். பெரிய எதிர்பார்ப்பின்றி வெளியான இந்த படம் பாக்ஸ்..

மம்முட்டியுடன் நடிக்கும் நயன்தாராவின் கேரக்டர்

லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் நடிகை நயன்தாரா தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் பிசியாக முன்னணி இடத்தில் இருந்தாலும்...

10 நாடுகள். 3,000 திரையரங்குகள். 'புலி'யின் பிரமாண்ட ஓப்பனிங்

இளையதளபதி விஜய் நடித்துள்ள 'புலி' திரைப்படம் வரும் அக்டோபர் 1ஆம் தேதி உலகம் முழுவதும் ரிலீஸாகவுள்ளது...

'கபாலி'யில் தன்ஷிகாவின் வித்தியாசமான லுக்?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் 'கபாலி' படத்தின் படப்பிடிப்பு சென்னையில் மிக விறுவிறுப்பாக நடந்து வருகிறது என்பதை ஏற்கனவே பார்த்தோம்...

ரியல் ஹீரோ விஜய்க்கு வாழ்த்து தெரிவித்த 'தனி ஒருவன்' ராஜா

இளையதளபதி விஜய் நடித்த 'புலி' படத்தின் முதல் டிரைலரை விட இரண்டாவது டிரைலருக்கு இருமடங்கு வரவேற்பு இருக்கின்றது...