சென்னை மாயாஜாலில் 'புலி' செய்த மற்றொரு சாதனை

  • IndiaGlitz, [Saturday,September 26 2015]

இளையதளபதி விஜய்யின் 'புலி' திரைப்படம் விஜய் படங்களின் மேலும் ஒரு படம் என்ற வகையில் இல்லாமல் இதுவரை வெளிவந்த விஜய் படங்களிலேயே பெஸ்ட் என்று எண்ணும் வகையில், அந்த படத்தின் டிக்கெட்டுக்கள் படுவேகமாக விற்பனையாகி வருகிறது.

'புலி' படத்தின் முன்பதிவு ஆரம்பமாகி ஒருசில மணி நேரங்களில் முதல் நாள் காட்சிகளுக்கான டிக்கெட்டுக்கள் விற்று தீர்ந்துவிட்டன. இந்நிலையில் சென்னையின் மிகப்பெரிய காம்ப்ளக்ஸ் தியேட்டரான மாயாஜாலில் இன்று காலை வந்த செய்திப்படி தினமும் 48 காட்சிகள் 'புலி' படத்தை திரையிடுவதாக அறிவிக்கப்பட்டு அதற்கான முன்பதிவும் தொடங்கியது. ஆனால் இந்த படத்தின் டிக்கெட்டுக்களுக்கு ஏற்பட்ட டிமாண்ட் காரணமாக தற்போது மாயாஜால், காட்சிகளின் எண்ணிக்கையை அதிகரித்துள்ளது. இப்போதைய நிலவரப்படி, 68 காட்சிகள் திரையிட உள்ளதாக கூறப்படுகிறது.

அதேபோல் ரசிகர்களின் விருப்பத்திற்குரிய தியேட்டர் என்ற பெயர் பெற்ற காசி தியேட்டரில் 'புலி' திரைப்படத்தின் முதல் காட்சி அதிகாலை 4.30 என கூறப்படுகிறது. இந்த காட்சிக்கான அனுமதியை தியேட்டர் நிர்வாகம் பெற்றுவிட்டதாகவும் கூறப்படுகிறது. 'புலி' படம் ரிலீஸாக இன்னும் ஐந்து நாட்கள் உள்ள நிலையில் இன்னும் என்னென்ன புதுப்புது தகவல்கள் வருகின்றது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

More News

பாபிசிம்ஹாவின் 'கோ 2'வில் ஹன்சிகா?

தல அஜீத் நடித்து வரும் 'வேதாளம்' படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தில் இருக்கும் நிலையில்...

தல அஜீத்தின் அட்டகாசமான 'கெத்து' பாடல்?

தல அஜீத் நடித்து வரும் 'வேதாளம்' படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தில் இருக்கும் நிலையில், இந்த படத்தின் டைட்டில்...

சீனா, ஜப்பானில் ரிலீஸ் ஆகின்றதா 'புலி'?

இளையதளபதி விஜய் நடித்துள்ள 'புலி' திரைப்படம் குறித்து ஒவ்வொரு நாளும் புதுப்புது செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றது...

'புலி' வியாபாரம் குறித்து புதிய சுவாரஸ்ய தகவல்

இளையதளபதி விஜய் நடிப்பில் சிம்புதேவன் இயக்கிய 'புலி' படத்தின் அனைத்து ஏரியாவின் உரிமைகளும் விற்பனையாகி கிட்டத்தட்ட தமிழகம்...

அமெரிக்கா, கனடாவில் 'புலி' செய்த புதிய சாதனை

இளையதளபதி விஜய் நடித்த 'புலி' திரைப்படம் ரிலீஸ் ஆவதற்கு முன்பே பல்வேறு சாதனைகளை உடைத்து வருகிறது....