'புலி' படத்தின் சென்சார் விபரங்கள்
Send us your feedback to audioarticles@vaarta.com
இளையதளபதி விஜய் நடித்த 'புலி' திரைப்படம் இன்று தணிக்கை செய்யப்படும் என்பதை ஏற்கனவே பார்த்தோம். அனைவரும் எதிர்பார்த்தபடி இன்று 'புலி' படத்தை தணிக்கை செய்த அதிகாரிகள் படத்திற்கு 'U' சர்டிபிகேட் கொடுத்துள்ளனர். மேலும் படக்குழுவினர்களிடம் தங்கள் பாராட்டுக்களையும் தணிக்கை அதிகாரிகள் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இதுவரை நடித்த விஜய் படங்களிலேயே 'புலி' திரைப்படம் மிக அதிக பட்ஜெட்டில் அதாவது ரூ.100 கோடிக்கும் மேல் செலவு செய்து தயாரிக்கப்பட்டுள்ளதால், இந்த படத்திற்கு தமிழக அரசின் வரிவிலக்கு பெரும் உதவியாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இந்த படம் 'U' சர்டிபிகேட் பெற்றுள்ளதால் வரிவிலக்கு பெரும் வாய்ப்பை பெற்றுள்ளது. மேலும் 'புலி' திரைப்படத்தையும் சேர்த்து தொடர்ச்சியாக 'U' சர்டிபிகேட் பெறும் ஆறாவது விஜய் படம் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.
அதுமட்டுமின்றி விஜய் படங்கள் என்றாலே குழந்தைகளுடன் ஃபேமிலி ஆடியன்ஸ்களும் விரும்பி தியேட்டருக்கு வருவார்கள். அதற்கும் இந்த 'U' சர்டிபிகேட் பேருதவியாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments