close
Choose your channels

24 மணி நேரத்தில் 'புலி' செய்த சாதனை. பாகுபலியை வீழ்த்துமா?

Friday, August 21, 2015 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நேற்று அதிகாலை 12மணிக்கு வெளியான இளையதளபதி விஜய்யின் 'புலி' படத்தின் டிரைலர், அனைவரும் எதிர்பார்த்தபடி புதிய சாதனையை நிகழ்த்திவிட்டது. இதுவரை தென்னிந்திய திரைப்படங்களில் 24 மணி நேரங்களில் ஒரு மில்லியன் பார்வையாளர்களை பெற்ற ஒரே படம் என்ற பெருமையை பெற்றிருந்த 'ஐ' படத்தின் சாதனையை வீழ்த்தி 20 மணி நேரத்தில் ஒரு மில்லியனுக்கும் அதிகமான பார்வையாளர்களை 'புலி' டிரைலர் பெற்றுவிட்டது. இந்த சாதனை கண்டிப்பாக விஜய் ரசிகர்களால் மட்டும் ஏற்பட்ட சாதனை அல்ல. அனைத்து தரப்பினர்களையும் டிரைலர் வெகுவாக கவர்ந்துள்ளது என்பதை மீண்டும் நிரூபணம் ஆகியுள்ளது.

அதுமட்டுமின்றி இதுவரை அதிக லைக்குகள் வாங்கிய டிரைலர் என்ற புகழை பெற்றிருந்த 'என்னை அறிந்தால்' படத்தின் சாதனையையும் 'புலி' டிரைலர் மிஞ்சிவிட்டது. என்னை அறிந்தால் டிரைலர் 54,000 லைக்குகள் மட்டுமே இதுவரை பெற்றிருந்த நிலையில் வெறும் 24மணி நேரத்தில் 60,000 லைக்குகளை பெற்று எந்த படமும் தொட முடியாத சாதனையை செய்துள்ளது.

'பாகுபலி'யை வீழ்த்த ஒரு படம் வர இன்னும் பல வருடங்கள் ஆகும் என விமர்சகர்கள் பலர் எழுதி வந்த நிலையில், இன்னும் ஒரே மாதத்தில் ரிலீஸாகவுள்ள இந்த 'புலி' 'பாகுபலி'யின் வசூல் சாதனையை நிச்சயம் முறியடிக்கும் என அனைவராலும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த டிரைலருக்கு கிடைத்த மாபெரும் வரவேற்பில் இருந்தே இந்த படத்தின் வெற்றி உறுதியாகியுள்ளது. விஜய் ரசிகர்கள் மட்டுமின்றி உலகில் உள்ள அனைத்து தமிழர்களையும் இந்த படம் நிச்சயம் கவரும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment