'புலி', 'வேதாளம்' படங்களை இணைத்த கமலின் 'தூங்காவனம்'

  • IndiaGlitz, [Saturday,October 03 2015]

நேற்று முன் தினம் விஜய் நடிப்பில் வெளியாகிய 'புலி' திரைப்படத்தை அமெரிக்காவில் ATMUS Entertainment நிறுவனம் பிரமாண்டமாக வெளியிட்டது என்பதை அனைவரும் அறிவோம். அமெரிக்காவில் 'புலி' திரைப்படத்திற்கு நல்ல வரவேற்பு இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இதே அமெரிக்காவில் அஜீத் நடித்து வரும் 'வேதாளம்' திரைப்படத்தை GK Media USA' என்ற நிறுவனம் வெளியிட போவதாக கூறப்படுகிறது.

அஜீத், விஜய் என்ற இரண்டு பெரிய மாஸ் நடிகர்களின் படங்களை வெளியிடும் இந்த இரண்டு நிறுவனங்கள் இணைந்து கமல்ஹாசன் நடிப்பில் உருவாகியுள்ள 'தூங்காவனம்' படத்தின் தமிழ்ப்பதிப்பை வெளியிட முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. 'புலி', வேதாளம்' படங்களுக்கு சமமாக 'தூங்காவனம்' படத்தை அமெரிக்காவில் மிக அதிகளவிலான திரையரங்குகளில் வெளியிட இந்த நிறுவனங்கள் முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.

கமல்ஹாசன், த்ரிஷா, பிரகாஷ்ராஜ், கிஷோர், சம்பத், யூகிசேது, மதுமிதா, ஆஷா சரத் மற்றும் பலர் நடித்த 'தூங்காவனம்' படத்தை கமல்ஹாசனின் உதவியாளர் ராஜேஷ் எம்.செல்வா இயக்கியுள்ளார். ஜிப்ரான் இசையமைத்துள்ள இந்த படத்தை ராஜ்கமல் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரித்துள்ளது.