சிவாஜி கணேசன் வீட்டில் விஜய்

  • IndiaGlitz, [Thursday,September 24 2015]

இளையதளபதி விஜய் நடித்த 'புலி' திரைப்படத்தின் இரண்டாவது டிரைலர் ஒருபக்கம் ரசிகர்களின் மாபெரும் வரவேற்பை பெற்றுள்ள நிலையில் மறுபக்கம் விஜய் 59" படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த படத்தில் போலீஸ் கமிஷனராக நடித்து வரும் விஜய், தற்போது சென்னை தி.நகரில் உள்ள நடிகர் திலகம் சிவாஜிகணேசன் அவர்களின் 'அன்னை இல்லத்தில் நடைபெற்று வரும் படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளார்.

போலீஸ் கமிஷனரான விஜய்யும், அரசியல்வாதி கேரக்டரில் நடிக்கும் ஒருவரும் அன்னை இல்லத்தில் நடந்த படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. அன்னை இல்லத்தின் முன் போலீஸ் ஜீப்கள் வரிசையாக நிற்கப்பட்டுள்ளதையும் பார்க்க முடிகிறது. 'அன்னை இல்லத்தில் இன்னும் மூன்று அல்லது நான்கு நாட்கள் படப்பிடிப்பு நடைபெறும் என கூறப்படுகிறது.

நடிகர் திலகம் சிவாஜி கணேசனுடன், 'ஒன்ஸ்மோர்' என்ற படத்தில் விஜய் நடித்துள்ளார் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

More News

'தல 56' படத்தின் டைட்டில் 'வேதாளம்'

அஜீத் ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டிருந்த 'தல 56' படத்தின் டைட்டில் ஒருவழியாக வெளிவந்து சஸ்பென்ஸ் உடைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது...

'புலி' 2வது டிரைலர் விமர்சனம்

இளையதளபதி விஜய் நடித்த 'புலி' திரைப்படத்தின் முதல் டிரைலர் இந்திய அளவில் பல சாதனைகள் புரிந்து அனைவரையும் கவர்ந்த நிலையில்...

விஜய் ரசிகர்களுக்கு அதிர்ச்சி, 'புலி'க்கு நீதிமன்ற தடையா?

இளையதளபதி விஜய் நடித்த 'புலி' திரைப்படம் வரும் அக்டோபர் 1ஆம் தேதி உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியிட அனைத்து ஏற்பாடுகளையும் தயாரிப்பாளர்கள் ...

குற்றம் கடிதல்- திரை விமர்சனம்

முற்றிலும் புதியவர்களைக் கொண்ட குழுவிடமிருந்து வந்திருக்கு படம் ‘குற்றம் கடிதல்’. சிறந்த தமிழிப் படத்துக்கான தேசிய விருதையும் சர்வதேச திரைப்பட விழாக்களில்...

'தல' ரசிகர்களுக்கு இன்றிரவு இரட்டை விருந்து?

'வீரம்' சிவா இயக்கத்தில் அஜீத் நடித்து வரும் 'தல 56' படத்தின் அதிகாரபூர்வமான டைட்டில் எப்போது வரும் என...