'வீரம்' படத்திற்கு விஜய் கொடுத்த கமெண்ட். பரதன்

  • IndiaGlitz, [Thursday,October 20 2016]

இளையதளபதி விஜய் நடித்து வரும் 'பைரவா' படத்தின் இயக்குனர் பரதன் இதற்கு முன்னர் விஜய் நடித்த 'அழகிய தமிழ் மகன்' படத்தை இயக்கியவர் மட்டுமின்றி விஜய் நடித்த 'கில்லி' மற்றும் அஜித் நடித்த 'வீரம்' படத்திற்கு வசனம் எழுதியவர் என்பது பலருக்கு தெரிந்திருக்கும்
இந்நிலையில் 'பைரவா' படத்தின் கதையை முதன்முதலில் விஜய்யிடம் சொல்ல அவருடைய அலுவலகத்திற்கு சென்றபோது, கில்லி' படப்பிடிப்பின்போது அன்று எப்படிப் பழகினாரோ, அதே மாறாத அன்புடன் தன்னை வரவேற்றதாகவும், அதுமட்டுமின்றி தான் எழுதிய 'வீரம்' பட வசனங்களை சிலாகித்து விஜய் பேசியதாகவும், பரதன் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.
மேலும் 'பைரவா' படத்தின் கதையை கேட்டதும் உற்சாகமான விஜய், இந்த படத்தை நாம் நிச்சயம் பண்றோம்' என்று எழுந்து நின்று கைகொடுத்ததாகவும், இதன்படி தற்போது படத்தின் இறுதிக்கட்டத்தில் இருப்பதாகவும் பரதன் தன்னுடைய பேட்டியில் கூறியுள்ளார்.

More News

விஜய்யின் 'பைரவா' படத்தில் இணையும் அருண்பாண்டியன்

பிரபல நடிகரும் விநியோகிஸ்தருமான அருண்பாண்டியன் இளையதளபதி விஜய் நடித்து வரும் 'பைரவா' படத்தின் வெளிநாட்டு உரிமையை பெற்றுள்ளதாக தகவல்கள் வந்துள்ளது...

கே.வி.ஆனந்த்-விஜய்சேதுபதி பட டைட்டில் இதுதான்!!

பிரபல இயக்குனர் கே.வி.ஆனந்த் இயக்கத்தில் விஜய்சேதுபதி, மடோனா செபாஸ்டியன், டி.ராஜேந்தர் உள்பட பலர் நடித்து வரும் திரைப்படத்தின் டைட்டில் விரைவில் அறிவிக்கப்படவுள்ளதாக கே.வி.ஆனந்த் கடந்த இரண்டு நாட்களுக்கு முன் தனது சமுக வலைத்தளத்தில் தெரிவித்திருந்தார்.

60 வயது முதியவருக்கு ஜோடியாக நடிக்கும் தமன்னா

தமன்னா நடிப்பில் சமீபத்தில் வெளியான 'தேவி' திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில் அவர் தற்போது சிம்புவுடன் 'அன்பானவன் அசராதவன் அடங்காதவன்' படத்தில் நடித்து வருகிறார்.

'புலிமுருகன்' ரீமேக் நாயகர்களின் முக்கிய தகவல்

மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் நடிப்பில் வெளிவந்த சூப்பர் ஹிட் வெற்றிபடமான 'புலிமுருகன்' படத்தின் அனைத்து மொழிகளின் ரீமேக் உரிமையை அபிஷேக் பிலிம்ஸ் நிறுவனத்தின் ரமேஷ்பிள்ளை வாங்கியுள்ளதாக வெளிவந்த செய்தியினை நேற்று பார்த்தோம்

பாஜகவில் இணைந்த அஜித்துடன் நடித்த பிரபல நடிகர்

பிரபல மலையாள நடிகரும் அஜித் நடித்த 'தீனா' படத்தில் முக்கிய வேடத்தில் நடித்தவருமான சுரேஷ் கோபி இன்று பாரதிய ஜனதா கட்சியில் அதிகார்பூர்வமாக இணைந்தார்.