'பின்னிட்டேப்பா'. விஜய்யிடம் பாராட்டு பெற்ற பிரபலம் யார் தெரியுமா?

  • IndiaGlitz, [Sunday,October 23 2016]

இளையதளபதி விஜய் நடித்து வரும் 'பைரவா' படத்தின் புதுப்புது ஸ்டில்கள் அவ்வப்போது வெளிவந்து ரசிகர்களிடம் மாபெரும் வரவேற்பை பெற்று வருகிறது. இந்த ஸ்டில்களில் விஜய்யின் காஸ்ட்யூம் மிக அபாரமாக இருப்பதாக அவரது ரசிகர்களிடம் இருந்து கமெண்டுக்கள் வந்து கொண்டிருக்கின்றன. இந்த பெருமை அனைத்தும் இந்த படத்தின் காஸ்ட்யூம் டிசைனர் சத்யாவுக்கு போய் சேரும்
இதுகுறித்து சத்யா கூறும்போது, 'நானே ஒரு தீவிர விஜய் ரசிகன் என்பதால் எனது தலைவருக்காக வித்தியாசமான காஸ்ட்யூம்களை இந்த படத்திற்காக தயார் செய்தேன். குறிப்பாக திருவிழா பாடலில் விஜய் அணிந்துள்ள பிரிண்ட் டி-சர்ட் மற்றும் பச்சை கலர் சட்டையை அவரே தேர்வு செய்தார்.
மேலும் சுவிஸ் பாடலுக்காக விஜய்க்கு நான் ஐந்து விதமான சூட்-கள் தயார் செய்தேன். அவற்றை பார்த்த விஜய் 'சத்யா பின்னிட்டேப்பா' என்று பாராட்டினார். இந்த பாராட்டே எனக்கு கிடைத்த மிகப்பெரிய பரிசாக நான் கருதுகிறேன்' என்று சத்யா கூறியுள்ளார்.