close
Choose your channels

புட்ட பொம்மா பாடலுக்கு செம டான்ஸ் ஆடும் விஜய்.. பூஜா ஹெக்டே பகிர்ந்த வீடியோ..!

Friday, June 23, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தளபதி விஜய்யின் பிறந்தநாள் நேற்று தமிழ்நாடு முழுவதும் மிகவும் சிறப்பாக அவரது ரசிகர்களால் கொண்டாடப்பட்டது என்பதும் தமிழ் திரை உலக பிரபலங்கள் பலர் அவருக்கு வாழ்த்து கூறினார்கள் என்பதையும் பார்த்தோம்.

இந்நிலையில் விஜய்யின் ’பீஸ்ட்’ படத்தில் நடித்த நடிகை பூஜா ஹெக்டே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். ’பீஸ்ட்’ படத்தின் படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்தபோது விஜய், டான்ஸ் மாஸ்டர் சதீஷ், பூஜா ஹெக்டே மற்றும் இரண்டு குழந்தைகள் ஆகியோர்கள் புட்ட பொம்மா பாடலுக்கு நடனமாடிய வீடியோவை அவர் பகிர்ந்து உள்ளார்.

’பீஸ்ட்’ படத்தின் படப்பிடிப்பின் போது எடுத்த இந்த வீடியோ தனது மொபைல் போனில் இருந்ததாகவும் நேற்று விஜய் பிறந்த நாளுக்காக இந்த வீடியோவை பகிர்ந்து உள்ளேன் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

பூஜா ஹெக்டே பகிர்ந்த இந்த வீடியோவுக்கு ஆயிரக்கணக்கான கமெண்ட்ஸ்களும் சுமார் 4 லட்சம் லைக்ஸ்களும் குவிந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment