பூஜா ஹெக்டேவிடம் விஜய்யின் கிண்டலான காதல்: சன் பிக்சர்ஸ் வெளியிட்ட வீடியோ

தளபதி விஜய் நடித்து முடித்துள்ள ’பீஸ்ட்’ திரைப்படம் வரும் 13-ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் புரமோஷன் பணிகளை விறுவிறுப்பாக சன்பிக்சர்ஸ் செய்து வருகிறது. ஏற்கனவே இந்த படத்தின் 3 பாடல்கள் மற்றும் டிரைலர் வெளியாகி உள்ள நிலையில் தற்போது மேலும் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளது

இந்த வீடியோவில், ’பேசுவதற்கு பயமாக இருந்தால் என் கையை வேண்டுமானால் பிடித்து கொள்ளுங்கள்’ என்று பூஜா ஹெக்டே கூற அதற்கு விஜய், ‘நான் வேண்டுமானால் உன் இடுப்பை பிடித்து கொள்ளவா’ என்று சீரியஸாக ரொமான்ஸ் டயலாக் பேசுகிறார்.

அதேபோல் ‘எங்களையெல்லாம் காப்பாற்றுவேன் என்று சொன்னீர்களே? என்று கேட்ட பூஜாவிடம் ‘உங்களையெல்லாம் காப்பாற்ற வேண்டும் என்று சட்டம் உள்ளதா? எனவும் மீண்டும் கிண்டலாக கூறுகிறார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.