கட்சியில் உறுப்பினர்களை சேர்க்க டெக்னாலஜி: விஜய் அரசியல் கட்சியின் மாஸ் திட்டம்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
தமிழ்நாடு உள்பட இந்தியாவில் உள்ள அரசியல் கட்சிகள் உறுப்பினர்களை புதிதாக சேர்ப்பதற்கு வீடு வீடாக செல்வது அல்லது மிஸ்டு கால் மூலம் சேர்க்கை நடந்து வருகிறது. ஆனால் விஜய் ஆரம்பிக்க இருக்கும் அரசியல் கட்சி முழுக்க முழுக்க டெக்னாலஜி மூலம் உறுப்பினர்களை சேர்க்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நடிகர் விஜய் விரைவில் அரசியல் கட்சி தொடங்க இருக்கும் நிலையில் இந்த கட்சிக்கு உறுப்பினர்களை சேர்ப்பதற்காக புதிய செயலி உருவாக்கப்பட்டு வருவதாகவும் இந்த செயலி இன்னும் ஐந்து நாட்களில் அறிமுகம் செய்யப்படும் என்றும் கூறப்படுகிறது.
விஜய் பெரும்பாலும் இளைய தலைமுறை மற்றும் முதல் முறையாக வாக்களிக்க போகும் இளைஞர்களை குறி வைத்துள்ளதால் இந்த செயலி மூலம் உறுப்பினர்களை சேர்க்கும் திட்டம் மிகச் சரியானது என்று கூறப்பட்டு வருகிறது.
பெரும்பாலும் இளைஞர்கள் செயலிகளை பயன்படுத்துவதால் விஜய்யின் அரசியல் கட்சியும் செயலி மூலம் உறுப்பினர்களை சேர்க்க திட்டமிட்டுள்ளது. ஏற்கனவே விஜய் மக்கள் இயக்கம் ரத்த தானம் செய்ய திட்டமிட்டபோது இதேபோன்று ஒரு செயலியை உருவாக்கி ரத்ததானம் செய்ய விரும்புபவர்கள் அதில் தங்கள் விண்ணப்பத்தை பதிவு செய்யலாம் என்று அறிவித்திருந்தது.
தற்போது அதே முறையை தான் உறுப்பினர்கள் சேர்க்கும் நடவடிக்கையில் ஈடுபட போகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இன்னும் விஜய் அரசியல் கட்சி பல நடவடிக்கைகளை டெக்னாலஜி மூலமே செயல்படுத்த திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments