விஜய் ஆரம்பிக்கும் கட்சியின் பெயர் இதுவா? முழு விவரங்கள் எப்போது?
Send us your feedback to audioarticles@vaarta.com
நடிகர் விஜய் அரசியல் கட்சி ஆரம்பிப்பது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் கட்சியின் பெயர் குறித்த தகவல் தற்போது இணையத்தில் கசிந்து வருகிறது.
தளபதி விஜய் தற்போது தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக இருக்கும் நிலையில் அவருக்கு கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். விஜய் மக்கள் இயக்கம் கடந்த சில ஆண்டுகளாகவே சமூக சேவை செய்து வருகிறது என்பதும், அது மட்டும் இன்றி விஜய் மக்கள் இயக்கத்தின் சார்பில் ரத்த தான மையம், விஜய் விழியகம், விஜய் பயிலகம், விஜய் மினி கிளினிக், விஜய் நூலகம் ஆகியவை பொதுமக்களின் நலனுக்காக ஆரம்பிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் 10ஆம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு வகுப்பில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுத்தொகை அளித்தது, தூத்துக்குடி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் ஏற்பட்ட வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் செய்தது ஆகியவை அரசியலுக்கு அடித்தளமாக கருதப்பட்டது.
இந்த நிலையில் சமீபத்தில் விஜய் மக்கள் இயக்கத்தின் நிர்வாகிகளை சந்தித்த விஜய் அரசியல் கட்சி ஆரம்பிப்பதை உறுதி செய்துள்ளதாக கூறப்பட்டது. அது மட்டுமின்றி பிப்ரவரி மாதம் புஸ்ஸி ஆனந்த் உட்பட விஜய் மக்கள் இயக்கத்தின் நிர்வாகிகள் டெல்லி சென்று விஜய் மக்கள் இயக்கத்தை அதிகாரபூர்வமாக அரசியல் கட்சியாக தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட இருப்பதாக கூறப்பட்டது.
இந்த நிலையில் தற்போது வந்துள்ள தகவலின் படி விஜய்யின் புதிய கட்சிக்கு ’தமிழக முன்னேற்ற கழகம்’ என்ற பெயர் வைக்க உள்ளதாகவும் பிப்ரவரி முதல் வாரத்தில் கட்சியின் பெயர், பொடி உள்ளிட்ட முழு விவரங்கள் வெளியாக உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com