'விஜய் 60' படத்தில் விஜய்யின் கேரக்டர் என்ன தெரியுமா?

  • IndiaGlitz, [Tuesday,August 30 2016]

இளையதளபதி விஜய் நடித்து வரும் 60வது படத்தின் படப்பிடிப்பு பல கட்டங்களாக உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
இருப்பினும் இந்த படத்தின் ஸ்டில்கள் இதுவரை ஆன்லைனில் கசியாததால், விஜய் இந்த படத்தில் என்ன கேரக்டரில் நடித்து வருகிறார் என்பது தெரியாமலே இருந்தது.
இந்நிலையில் படக்குழுவினர்களுக்கு நெருக்கமானவர்களிடம் இருந்து கசிந்துள்ள தகவலின்படி விஜய் இந்த படத்தில் மருத்துவக் கல்லூரி மாணவராக நடித்து வருவதாக கூறப்படுகிறது. மேலும் இந்த படத்தில் அவர் நெல்லை தமிழையும் முதன்முதலாக பேசவுள்ளார்.
ஏற்கனவே இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்து வரும் கீர்த்திசுரேஷும் கல்லூரி மாணவியாக நடிப்பதாக செய்தி வெளிவந்தது.
விஜய், கீர்த்தி சுரேஷ், சதீஷ், ஜெகபதிபாபு, டேனியல் பாலாஜி, சுதன்ஷி பாண்டே, பாப்ரிகோஷ் உள்ளிட்ட பலர் நடித்து வரும் இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்து வருகிறார். இந்த படத்தை விஜயா புரடொக்ஷன்ஸ் நிறுவனம் பிரமாண்டமாக தயாரித்து வருகின்றனர். இந்த படத்தின் டைட்டில் மிக விரைவில் அறிவிக்கப்படவுள்ளதாக செய்திகள் வந்துள்ளது.

More News

ரஜினி-ரஞ்சித் மீண்டும் இணையும் படத்தில் தனுஷ். அதிகாரபூர்வ தகவல்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் பா.ரஞ்சித் இயக்கிய 'கபாலி' திரைப்பாம் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்றது. ரூ.800 கோடி...

கமல் பாணியை பின்பற்றும் விஜய்

இளையதளபதி விஜய் நடித்து வரும் 'விஜய் 60' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில் இந்த படத்தின் 70% படப்பிடிப்பு முடிந்துவிட்டதாகவும்...

வாய்மையே வெல்லும்” என்பதே எங்கள் தாரக மந்திரம். நடிகர் சங்கத்தின் நீண்ட அறிக்கை

நாசர் தலைமையிலான தென்னிந்திய நடிகர் சங்கம், சிறப்பான முறையில் சென்று கொண்டிருக்கும் நிலையில் ஒருசிலர்...

விஷால்-மிஷ்கின் 'துப்பறிவாளன்' படத்தில் இன்னொரு பிரபல ஹீரோ

விஷால் நடித்து வரும் 'கத்திச்சண்டை' படத்தின் படப்பிடிப்பு விரைவில் முடிவடையவுள்ள நிலையில் அடுத்த மாதம் முதல் அவர் மிஷ்கின் இயக்கத்தில் 'துப்பறிவாளன்' என்ற த்ரில் படத்தில் நடிக்கவுள்ளார்...

சென்னை காவல்துறை ஆணையரிடம் நாசர் அளித்த புகாரின் முழுவிபரம்

நடிகர் சங்கம் மீதும், நடிகர் சங்கத்தின் நிர்வாகிகள் மீதும் அடிப்படை ஆதாரங்கள் இல்லாமல் புகார் கூறி வருபவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க...