கமல், ரஜினி, விஷால் இல்லை: அடுத்த முதல்வர் விஜய்தான்
Send us your feedback to audioarticles@vaarta.com
முன்னாள் முதல்வர்கள் ஜெயலலிதா மற்றும் கருணாநிதி ஆகியோர் காலமானதை அடுத்து தமிழக அரசியலில் ஏற்பட்டுள்ள மிகப்பெரிய வெற்றிடத்தை நிரப்ப ஏற்கனவே கமல், ரஜினி மற்றும் விஷால் அரசியல் களத்தில் இறங்கிவிட்டனர். இவர்கள் மூவரும் தமிழக முதல்வர் பதவியை நோக்கி காய் நகர்த்தி வரும் நிலையில் தளபதி விஜய் தற்போது முதல்வராகியுள்ளார்.
ஆம், விஜய் தற்போது நடித்து கொண்டிருக்கும் 'சர்கார்' படத்தில் முதல்வர் வேடத்தில் அவர் நடித்துள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து செய்தி வெளியாகியுள்ளது. 'சர்கார்' ஒரு அரசியல் த்ரில்லர் படம் என்பது அனைவரும் அறிந்ததுதான் என்றாலும் முதல்வர் வேடத்தில் விஜய் நடித்திருக்கும் தகவல் விஜய் ரசிகர்களுக்கு மட்டுமின்றி அனைவருக்கும் ஆச்சரியத்தை அளித்துள்ளது.
கடந்த சில நாட்களாக 'சர்கார்' படத்தின் வொர்க்கிங் ஸ்டில்கள் வெளிவந்து சமூக வலைத்தளங்களில் டிரண்டிங் ஏற்படுத்தி வரும் நிலையில் இந்த படம் வரும் தீபாவளி அன்று திரைக்கு வரவுள்ளது. விஜய், கீர்த்தி சுரேஷ், ராதாரவி, பழ.கருப்பையா, வரலட்சுமி, யோகி பாபு, பிரேம் குமார் உள்ளிட்ட பலர் நடித்து வரும் 'சர்கார்' படத்திற்கு ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கின்றார். இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் பிரமாண்டமாக பெரும் பொருட்செலவில் தயாரித்து வருகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout