அரசியலை நோக்கி செல்லும் விஜய்யின் அடுத்த அதிரடி முடிவு!

  • IndiaGlitz, [Sunday,November 29 2020]

அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கம் என்ற பெயரில் திடீரென அரசியல் கட்சியை விஜய்யின் தந்தை எஸ்ஏ சந்திரசேகர் தொடங்கிய விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் தற்போது இந்த விவகாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது என்பது தெரிந்ததே

இருப்பினும் விஜய் கூடிய விரைவில் அரசியலுக்கு வருவார் என்றும் அதற்கான ஆரம்ப கட்டம் தான் அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கம் என்றும் கூறப்படுகிறது. இந்த நிலையில் தற்போது விஜய் மக்கள் இயக்கத்தை அடுத்து அடுத்த கட்டமாக ஒரு யூடியூப் சேனலை நடிகர் விஜய் தொடங்க விருப்பதாக அறிவிப்புகள் வெளிவந்துள்ளது

இனி விஜய்யின் திரைப்பட தகவல்கள் மற்றும் அறிவிப்புகள் அனைத்தும் இந்த சேனலில் தான் வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. விஜய்யின் பெயரில் யூடியூப் சேனல் ஆரம்பிப்பது குறித்து விஜய் மக்கள் இயக்கத்தின் பொறுப்பாளர் புஸ்ஸி ஆனந்த் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார். விஜயின் கோடிக்கணக்கான ரசிகர்கள் இந்த சேனலை பின் தொடர்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுவ்தால் எதிர்காலத்தில் அவர் அரசியலுக்கு வந்தால், இந்த சேனல் அவரது பிரச்சாரத்திற்கும் பயன்படும் என்பது குறிப்பிடத்தக்கது

More News

காவல்துறைக்கு ரஜினி தரப்பில் எழுதிய முக்கிய கடிதம்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் நாளை ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளை நேரில் சந்தித்து ஆலோசனை நடத்த உள்ளார் என்பதும் ராகவேந்திரா மண்டபத்தில் நடைபெறும்

விஜய்யின் 'மாஸ்டர்' திரைப்படம் வெளியாகும் தேதி குறித்த தகவல்!

தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கிய 'மாஸ்டர்' திரைப்படம் ஓடிடியில் வெளிவர வாய்ப்பு இல்லை என்றும் திரையரங்குகளில் தான் வெளிவரும்

ரம்யாவுக்கு விஷப்பரிட்சை வைக்கும் கமல்!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் நேற்றைய எபிசோடில் கமல் ஒரு சில போட்டியாளர்களிடம் கேள்வியை எழுப்பி பதிலை பெற்றார் என்பதும், அமைதியாக இருந்த ஷிவானியை கூட பேச வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது 

பஜாஜ் ஆயிலாக மாறிய பஜ்ஜி ஆயில்: நிஜமானது விவேக் காமெடி!

நடிகர் விவேக் ஒரு படத்தில் பஜ்ஜியில் உள்ள எண்ணெயை பிழிந்து வாகனங்களுக்கு செலுத்தும் காமெடி காட்சி ஒன்றில் நடித்து இருப்பார். அந்த காமெடி காட்சி கிட்டத்தட்ட இன்று உண்மையாகியுள்ளது 

ரஜினிகாந்த் தெளிவான முடிவை எடுப்பார்: தமிழக அமைச்சர் பேட்டி!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் விரைவில் அரசியல் கட்சியை தொடங்கி வரும் 2021 ஆம் ஆண்டு தேர்தலில் களம் இறங்குவார் என்று எதிர்பார்க்கப்பட்டது ஆனால் திடீரென சமீபத்தில் வெளியான தகவலின்