2026ல் விஜய் போட்டியிடும் தொகுதி இதுவா? தவெகவின் வேற லெவல் திட்டம்..!

  • IndiaGlitz, [Friday,February 09 2024]

கடந்த சில நாட்களுக்கு முன்னர் தமிழக வெற்றி கழகம் என்ற அரசியல் கட்சியை தளபதி விஜய் தொடங்கிய நிலையில் தற்போது அடுத்த கட்டமாக கட்சியின் முதல் மாநாடு நடத்துவது, கட்சியின் நிர்வாகிகளை நியமிப்பது, கட்சியின் கொள்கைகள், கொடி, சின்னம் ஆகியவற்றை அறிமுகப்படுத்துவது உள்பட பல்வேறு பணிகளில் அவர் இருப்பதாக கூறப்படுகிறது.

2026 ஆம் ஆண்டு நடைபெறும் சட்டசபை தேர்தலில் தான் போட்டியிடும் தொகுதியை கூட விஜய் முடிவு செய்து விட்டதாக கூறப்படுகிறது. விஜய்க்கு வட மாவட்டங்களை விட தென் மாவட்டங்களில் ரசிகர்கள் அதிகம் என்பதால் அவர் நாகப்பட்டினம் அல்லது தூத்துக்குடி ஆகிய இரண்டு தொகுதிகளில் ஒன்றில் போட்டியிடலாம் என்றும் அல்லது இரண்டிலுமே அவர் போட்டியிடலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

விஜய் தனது முதல் அரசியல் மாநாட்டை நெல்லையில் தான் நடத்த திட்டமிடப்பட்டு இருப்பதாகவும் இது குறித்து அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் தெரிகிறது. மொத்தத்தில் அடுத்த இரண்டு ஆண்டுகளில் தனது கட்சியை மக்களுக்கும் கொண்டு போய் சேர்க்கும் பணியை அவர் தொடங்கி விட்டதாகவும் வரும் பாராளுமன்ற தேர்தல் முடிவு அடைந்ததும், அதேபோல் தளபதி 69 படத்தை முடித்ததும் அவர் முழு நேரமாக தீவிரமாக அரசியலில் இறங்கி மக்களை நேரில் சந்திப்பார் என்றும் கூறப்படுகிறது.

தமிழக முழுவதும் உள்ள முக்கிய நகரங்களில் பொதுக் கூட்டங்களை நடத்தி மக்கள் மத்தியில் தனது கட்சியை கட்சியின் கொள்கை மற்றும் கோட்பாடுகளை எடுத்து கூறுவார் என்றும் கூறப்படுகிறது. மொத்தத்தில் இதுவரை நடிகர்கள் ஆரம்பித்த கட்சி போல் இல்லாமல் விஜய் வித்தியாசமாக முன் திட்டத்தோடு இருப்பதாக கூறப்படுவதால் அவரது கட்சியின் ரசிகர்கள் மற்றும் தொண்டர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.