'கோட்' படம் முடிந்ததும் பிரமாண்டமான மாநாடு.. தீவிர அரசியல் திட்டத்தில் விஜய்.!
Send us your feedback to audioarticles@vaarta.com
தளபதி விஜய் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் ’கோட்’ என்ற படத்தில் ஒரு பக்கம் நடித்துக் கொண்டிருக்கும் நிலையில் இன்னொரு பக்கம் அவர் தனது அரசியல் நகர்வுகளையும் கவனித்து வருகிறார்.
சமீபத்தில் அவர் தனது விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளுடன் ஆலோசனை செய்த நிலையில் அடுத்த மாதம் அவர் அரசியல் கட்சியை முறையாக தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்ய இருப்பதாகவும் கூறப்படுகிறது.
மேலும் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை குறி வைத்துள்ள விஜய் முழு நேர அரசியலில் ஈடுபடவும் திட்டமிட்டுள்ளார் என்றும், அனேகமாக இன்னும் ஒரு படம் மட்டுமே அவர் அடிப்பார் என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில் ’கோட்’ படத்தை முடித்தவுடன் மதுரையில் தனது கட்சியின் அறிமுக விழா மற்றும் பிரம்மாண்டமான மாநாடு நடத்த திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் தனது கட்சியில் பிற கட்சிகளிலிருந்து வருபவர்களை சேர்க்கக்கூடாது என்றும் சினிமாவில் இருப்பவர்களை அதிகம் சேர்க்க அவர் விரும்பவில்லை என்றும் கூறப்படுகிறது.
குறிப்பாக பெண்கள் அதிலும் படித்த பெண்கள் தனது கட்சியில் அதிகம் இருக்க வேண்டும் என்று அவர் விரும்புவதாகவும் முழுக்க முழுக்க அவர் குறிவைப்பது இளைஞர்களின் ஓட்டுகளை தான் என்றும் கூறப்படுகிறது. இதற்கு முன் அரசியலுக்கு வந்த நடிகர்களிடம் இருந்து முற்றிலும் வித்தியாசமாக விஜய் இருப்பதால் அவர் அரசியலில் வெற்றி பெற வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments