மீண்டும் ஒரு குட்டி ஸ்டோரியா? விஜய் கலந்து கொள்ளும் 'வாரிசு' புரமோஷன் நிகழ்ச்சி!

  • IndiaGlitz, [Saturday,January 07 2023]

தளபதி விஜய் தனது ஒவ்வொரு படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொள்வார் என்றும் அவரது குட்டி ஸ்டோரி உள்பட சுவராசியமான பேச்சை கேட்பதற்காகவே ரசிகர்கள் காத்திருப்பார்கள் என்பதும் தெரிந்ததே.

கடந்த டிசம்பர் 24ஆம் தேதி ‘வாரிசு’ திரைப்படத்தின் இசை வெளியீட்டின் போது அவர் பேசிய பேச்சு இணையதளங்களில் வைரலானது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தமிழ், தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளில் ‘வாரிசு’ திரைப்படம் உருவாகியுள்ள நிலையில் தெலுங்கு படத்தின் புரமோஷன் விழா ஜனவரி 8ஆம் தேதி அதாவது நாளை நடைபெற இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள விஜய் ஒப்புக் கொண்டு இருப்பதாகவும் இதில் அவர் தெலுங்கு மொழியில் பேசுவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. தமிழ் ரசிகர்களுக்காக குட்டி ஸ்டோரிகள் சொன்னது போலவே தெலுங்கிலும் விஜய் குட்டி ஸ்டோரி சொல்ல வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. தெலுங்கிலும் விஜய் ‘வாரிசு’ படத்தை புரமோஷன் செய்வதால் தெலுங்கிலும் இந்தப் படம் வசூலில் சாதனை செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

விஜய், ராஷ்மிகா மந்தனா பிரகாஷ்ராஜ், சரத்குமார், ஷாம், யோகிபாபு, பிரபு, ஜெயசுதா, ஸ்ரீகாந்த், சங்கீதா, சம்யுக்தா, உள்பட பலர் நடித்து வரும் இந்த படம் கார்த்திக் பழனி ஒளிப்பதிவில், பிரவிண் கே.எல் படத்தொகுப்பில் உருவாகி வருகிறது. தமிழ், தெலுங்கு மொழிகளில் உருவாகியுள்ள இந்த படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

More News

'துணிவு' 'வாரிசு' முதல் நாள் முதல் காட்சி எப்போது? பரபரப்பு தகவல்

அஜித் நடித்த 'துணிவு' மற்றும் விஜய் நடித்த 'வாரிசு' ஆகிய இரண்டு திரைப்படங்களும் பொங்கல் விருந்தாக வரும் 11-ம் தேதி உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியாக இருப்பதாக அதிகாரப்பூர்வமாக

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து இந்த வாரம் வெளியேற்றப்பட்டவர் இவரா? ஆச்சரியத்தில் ரசிகர்கள்!

 பிக் பாஸ் நிகழ்ச்சி இறுதி கட்டத்தை நெருங்கி வருகிறது என்பதும் இந்த நிகழ்ச்சியின் கடந்த வாரம் நடந்த டிக்கெட் டு பினாலே டாஸ்க்கில் அமுதவாணன் வெற்றி பெற்று முதல் இறுதி போட்டையாளராக

சென்னை காசி தியேட்டரில் துணிவா? வாரிசா? செம வீடியோ ரிலீஸ்

அஜித் நடித்த 'துணிவு' மற்றும் விஜய் நடித்த படம் 'வாரிசு' ஆகிய இரண்டு திரைப்படங்களும் பொங்கல் விருந்தாக ஜனவரி 11ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் இந்த இரண்டு படங்களுக்கும் மிகப்பெரிய

விஜய்சேதுபதி நடிக்கும் முதல் வெப்தொடர்.. ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்

தமிழ் உள்பட தென்னிந்திய மொழிகளிலும் பாலிவுட் திரைப்படங்களில் பிஸியாக நடித்துக்கொண்டிருக்கும் நடிகர்களில் ஒருவர் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி என்பது தெரிந்ததே.

'தமிழ்நாடு வாழ்க': கமல்ஹாசனின் சாட்டையடி டுவிட்

சமூக வலைதளங்களில் குறிப்பாக டுவிட்டரில் நேற்று மாலை முதல் தமிழ்நாடு என்ற ஹேஸ்டேக் இந்திய அளவில் டிரெண்ட் ஆகி வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்.