ரசிகருக்கு விஜய் பெற்றோர் கொடுத்த இன்ப அதிர்ச்சி: வைரலாகும் வீடியோ
- IndiaGlitz, [Tuesday,January 21 2020]
தளபதி விஜய் அவர்களுக்கு கோடிக்கணக்கான ரசிகர்கள் இருக்கிறார்கள் என்றால் அவரது நடிப்பு மட்டும் ஒரு காரணம் அல்ல, அவர் தன்னுடைய ரசிகர்கள் மீது வைத்திருக்கும் அளவில்லா அன்பு இன்னொரு முக்கிய காரணமாகும். தனது ரசிகர்களுக்கு ஏதாவது ஒன்றால் உடனே அவர்களை வீட்டிற்கு சென்று சந்தித்து ஆதரவு கொடுப்பது, ரசிகர்களின் நல்லது கெட்டதுகளில் கலந்து கொண்டு வாழ்த்தும் ஆதரவும் தெரிவிப்பது என்பது விஜய்யின் கூடவே பிறந்த குணம் ஆகும்
அந்த வகையில் விஜய் மட்டுமன்றி விஜய்யின் பெற்றோர்களும் விஜய் ரசிகர்களிடம் மிகுந்த மரியாதை வைத்துள்ளனர் என்பது பல்வேறு சமயங்களில் நாம் தெரிந்து இருக்கின்றோம். இந்த நிலையில் சமீபத்தில் மதுரையில் விஜய் ரசிகர் ஒருவரின் திருமணத்திற்கு சென்றிருந்த விஜய் பெற்றோர்கள் எஸ்.ஏ.சந்திரசேகர் மற்றும் ஷோபா ஆகியோர், அங்கிருந்த விஜய் ரசிகர் மன்ற நிர்வாகி மகேஷ் என்பவரின் வேண்டுகோளுக்கு இணங்க அவரது வீட்டிற்கு சென்றனர்.
மகேஷ் வீட்டினர் விஜய் பெற்றோர்களை ஆரத்தி எடுத்து வரவேற்றனர். பின்னர் மகேஷ் தனது குடும்பத்தினர்களுடன் விஜய் பெற்றோர்களுடன் புகைப்படம் எடுத்து கொண்டார். இந்த நிலையில் விஜய் பெற்றோர்களுக்கு மகேஷ் குடும்பத்தினர் சாப்பிடுவதற்காக சமையல் செய்ய, அந்த சமையலில் ஷோபா சந்திரசேகரும் உதவி செய்த புகைப்படங்கள், வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. ஒரு மாஸ் நடிகரின் பெற்றோர் ஒரு ரசிகரின் வீட்டிற்கு சென்று அவர்களுடைய குடும்ப உறுப்பினர் போல் சமையல் செய்தது என்பது மிகப்பெரிய விஷயமாக கருதப்படுகிறது. இந்த அன்புக்கு தான் விஜய்க்கு கோடிக்கணக்கான ரசிகர்கள் குவிந்து வருகின்றனர் என்பது குறிப்ப்பிடத்தக்கது
#ShobaAmma♥??@actorvijay pic.twitter.com/Vlg5m5UzN1
— ஒட்டன்சத்திரம் தளபதி சிவா (@fearless_shiva) January 20, 2020