தளபதி 62: 'கத்தி', 'மெர்சல்' படங்களை ஓவர்டேக் செய்யும் விஜய்
Send us your feedback to audioarticles@vaarta.com
விஜய் நடித்த சமீபத்திய படங்களில் சமுதாய பிரச்சனைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டதாக இருந்தது என்பது தெரிந்ததே. 'கத்தி' படத்தில் விவசாயிகளின் பிரச்சனை, 'பைரவா' படத்தில் கல்வி வள்ளல் என்ற பெயரில் பணம் சம்பாதிப்பவர்களை வெளிச்சத்துக்கு கொண்டு வருவது மற்றும் 'மெர்சல்' படத்தில் புனிதமான டாக்டர் தொழில் வியாபாரமாகி வருவதை சுட்டிக்காட்டியிருந்தது
குறிப்பாக மெர்சல் படத்தில் அவர் பேசிய ஜிஎஸ்டி மற்றும் பணமதிப்பிழப்பு குறித்த வசனங்கள் பெரும் சர்ச்சையானது மட்டுமின்றி அது படத்திற்கு இலவச விளம்பரமாகவும் இருந்தது
இந்த நிலையில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் தற்போது நடித்து வரும் 'தளபதி 62' படத்திலும் தற்போதைய தமிழக அரசியல், விவசாயம் மற்றும் தண்ணீர் பிரச்சனை உள்பட பல விஷயங்கள் அலசப்படுவதாகவும், இதுசம்பந்தமான சில தைரியமான வசனங்களை விஜய் பேசியுள்ளதாகவும், படக்குழுவினர்களிடம் இருந்து தகவல்கள் கசிந்துள்ளது.
ஏற்கனவே கமல், ரஜினி அரசியலில் குதித்திருப்பதால் சினிமாக்காரர்கள் மீது கோபத்தில் இருக்கும் அரசியல்வாதிகள், இந்த படத்தின் வசனங்களுக்கு எந்தவகையான ரியாக்சனை வெளிப்படுத்துவார்கள் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments