தளபதி 62: 'கத்தி', 'மெர்சல்' படங்களை ஓவர்டேக் செய்யும் விஜய்

  • IndiaGlitz, [Monday,March 12 2018]

விஜய் நடித்த சமீபத்திய படங்களில் சமுதாய பிரச்சனைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டதாக இருந்தது என்பது தெரிந்ததே. 'கத்தி' படத்தில் விவசாயிகளின் பிரச்சனை, 'பைரவா' படத்தில் கல்வி வள்ளல் என்ற பெயரில் பணம் சம்பாதிப்பவர்களை வெளிச்சத்துக்கு கொண்டு வருவது மற்றும் 'மெர்சல்' படத்தில் புனிதமான டாக்டர் தொழில் வியாபாரமாகி வருவதை சுட்டிக்காட்டியிருந்தது

குறிப்பாக மெர்சல் படத்தில் அவர் பேசிய ஜிஎஸ்டி மற்றும் பணமதிப்பிழப்பு குறித்த வசனங்கள் பெரும் சர்ச்சையானது மட்டுமின்றி அது படத்திற்கு இலவச விளம்பரமாகவும் இருந்தது

இந்த நிலையில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் தற்போது நடித்து வரும் 'தளபதி 62' படத்திலும் தற்போதைய தமிழக அரசியல், விவசாயம் மற்றும் தண்ணீர் பிரச்சனை உள்பட பல விஷயங்கள் அலசப்படுவதாகவும், இதுசம்பந்தமான சில தைரியமான வசனங்களை விஜய் பேசியுள்ளதாகவும், படக்குழுவினர்களிடம் இருந்து தகவல்கள் கசிந்துள்ளது.

ஏற்கனவே கமல், ரஜினி அரசியலில் குதித்திருப்பதால் சினிமாக்காரர்கள் மீது கோபத்தில் இருக்கும் அரசியல்வாதிகள், இந்த படத்தின் வசனங்களுக்கு எந்தவகையான ரியாக்சனை வெளிப்படுத்துவார்கள் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

More News

அதர்வாவின் பூமராங் படத்தில் இணைந்த மேயாத மான்' நடிகை

நடிகர்களில் அதர்வா திரை வர்த்தகத்தில் தன்னுடைய நிலையை வலுவாக்கி கொண்டு இருக்கிறார்.இந்த வருடம் வெளி வர இருக்கும் அவரது படங்கள் அவரை இன்னமும் உயரத்தில் கொண்டு போகும்

கராத்தே தியாகராஜன் அறிக்கையும் குஷ்புவின் டுவீட்டும்

உட்கட்சி பூசலுக்கு பெயர் பெற்ற கட்சி காங்கிரஸ் கட்சி. இதை இந்த கட்சியினர்களே ஒப்புக்கொள்வார்கள். காங்கிரஸ் கட்சியில் தமிழகத்தில் மட்டும் எத்தனை கோஷ்டி இருக்கின்றது என்பதை எண்ணுவது கூட கடினம்தான்

கால்பந்து மைதானத்தில் விழுந்த விமானம்: 67 பயணிகள் கதி என்ன?

வங்கதேசத்தில் இருந்து அமெரிக்காவிற்கு சென்று கொண்டிருந்த விமானம் ஒன்று நேபாளத்தில் தரையிறங்கும்போது திடீரென ரன்வேயை விட்டு விலகி அருகில் இருந்த கால்பந்து மைதானத்திற்குள் சென்று விபத்துக்குள்ளானது

ஆர்.கே.சுரேஷின் அடுத்த பட டைட்டில், இயக்குனர் அறிவிப்பு

நடிகர், தயாரிப்பாளர் என கோலிவுட்டில் வலம் வந்து கொண்டிருக்கும் ஆர்.கே.சுரேஷ் சமீபத்தில் கமல்ஹாசனின் கட்சியில் இணைந்து அரசியல்வாதியாகவும் மாறியுள்ளார்.

மீண்டும் பிரபல பாடகிக்கு பாலியல் தொல்லை: அதிர்ச்சி தகவல்

தமிழகத்தில் நாளுக்கு நாள் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து கொண்டே வருவதை ஊடகங்களில் வெளியாகும் செய்திகளில் இருந்து பார்த்து வருகிறோம்.