இந்த ஆண்டு எந்த குளறுபடிகளும் இருக்க கூடாது.. ரசிகர் மன்ற நிர்வாகிகளுக்கு விஜய் உத்தரவு..!
- IndiaGlitz, [Thursday,May 16 2024]
கடந்த ஆண்டு தளபதி விஜய் கல்வி விருது விழா நடத்தி 10ஆம் வகுப்பு, 12ஆம் வகுப்பு பொது தேர்வில் முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாணவ மாணவிகளுக்கு ரொக்க பரிசு வழங்கினார் என்பது தெரிந்தது. அந்த வகையில் இந்த ஆண்டும் 10ஆம் வகுப்பு 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் சமீபத்தில் வெளியாகிய நிலையில் மாணவ மாணவிகளுக்கு விருது வழங்கும் விழாவை நடத்த விஜய் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த ஆண்டு 1500 மாணவ மாணவிகளுக்கு தலா 5000 ரூபாய் வழங்க திட்டமிட்டு இருப்பதாகவும், மே 4ஆம் தேதி வரை தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருப்பதால் அதன் பிறகு இந்த விழா நடத்தப்படும் என்றும் ஆனால் அதே நேரத்தில் விஜய்யின் பிறந்த நாளான ஜூன் 22 ஆம் தேதிக்கு முன்பே இந்த விழா நடத்தி முடிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.
மேலும் கடந்த ஆண்டு முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ மாணவிகளை தேர்வு செய்ததில் ஒரு சில குளறுபடிகள் ஏற்பட்ட நிலையில் இந்த ஆண்டு எந்தவிதமான குளறுபடியும் இருக்கக்கூடாது என்று விஜய் தனது கட்சியின் நிர்வாகிகளுக்கு உத்தரவு பிறப்பித்து இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இந்த முறை முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவி மாணவ மாணவிகளுக்கு மட்டுமின்றி பெற்றோரை இழந்த போதும் பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த விழா நடைபெறும் தேதி மற்றும் இடம் குறித்து அறிவிப்பு விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் வெளியானவுடன் தமிழக வெற்றிக்கழக பணிகளை தீவிரப்படுத்த விஜய் திட்டமிட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது.