பீட்டாவை வீட்டுக்கு அனுப்ப வேண்டும். விஜய்யின் வீடியோ செய்தி
Send us your feedback to audioarticles@vaarta.com
ஜல்லிக்கட்டு போராட்டம் தமிழகம் முழுவதும் காட்டுத்தீ போல பற்றி எரிந்து கொண்டிருக்கும் நிலையில் இந்த வருடம் ஜல்லிக்கட்டுக்கு ஒரு சாதகமான முடிவை பெற்றே தீருவது என்று அனைத்து தமிழர்களும் ஒன்றிணைந்து உள்ளனர். காலம் காலமாக பல்வேறு கருத்துக்களால் பிரிந்திருந்த தமிழர்கள், இன்று காளை மாட்டால் ஒன்று சேர்ந்துள்ளனர். இந்த போராட்டத்தோடு தமிழர்கள் என்ற உள்ளுணர்வில் பக்கபலமாக இருந்து வருகின்றனர் கோலிவுட் திரையுலகினர்.
இந்நிலையில் இளையதளபதி விஜய், இந்த ஜல்லிக்கட்டு போராட்டத்திற்கு தனது ஆதரவை தெரிவித்துள்ளார். சற்று முன்னர் அவர் வெளியிட்டுள்ள வீடியோ செய்தி ஒன்றில் உள்ள தகவல் பின்வருமாறு:
எல்லோருக்கும் வணக்கம். உலகம் முழுவதும் சட்டத்தை உருவாக்குவது மக்களின் கலாச்சாரத்தையும், உரிமையையும் பாதுகாக்கத்தானே தவிர பறிப்பதற்கு அல்ல. தமிழனின் அடையாளம் ஜல்லிக்கட்டு. எதையும் எதிர்பார்க்காமல், யாருடைய தூண்டுதலும் இல்லாமல் கட்சி பேதமின்றி தமிழன் என்ற ஒரே உணர்வுடன் இந்த போராட்டத்தில் குதித்துள்ள அத்தனை நெஞ்சங்களுக்கும் நான் கடமைப்பட்டிருக்கின்றேன். இவ்வளவுக்கு காரணமான பீட்டாவை வீட்டுக்கு அனுப்பினால் நான் மிகவும் சந்தோஷப்படுவேன்' இவ்வாறு விஜய் தனது வீடியோ செய்தியில் கூறியுள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Contact at support@indiaglitz.com