ஒரே டேக்கில் ஓகெ செய்த விஜய்! பிரபல வில்லன் நடிகர் பாராட்டு
Send us your feedback to audioarticles@vaarta.com
தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் அட்லி இயக்கி வரும் 'தளபதி 63' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தை தீபாவளி அன்று திரையிட திட்டமிடப்பட்டுள்ளதால் படக்குழுவினர் இரவுபகலாக பணிபுரிந்து வருகின்றனர்.
இந்த நிலையில் இந்த படத்தின் முக்கிய கேரக்டரில் நடித்துள்ள பிரபல வில்லன் மற்றும் குணசித்திர நடிகர் செளந்திரராஜா 'தளபதி 63' படப்பிடிப்பில் தனக்கு நேர்ந்த அனுபவத்தை பேட்டில் ஒன்றில் பகிர்ந்து கொண்டார். 'தளபதி 63' படத்தில் தான் ஆறு காட்சிகளில் மட்டுமே தோன்றுவதாகவும், அதில் இரண்டு காட்சிகள் பிளாஷ்பேக் காட்சிகள் என்று கூறிய செளந்திரராஜா, இருப்பினும் தனது கேரக்டர் மக்கள் ஞாபகம் வைத்து கொள்ளும் அளவிற்கு முக்கிய கேரக்டர் என்றும் தெரிவித்தார். ஏற்கனவே 'தெறி' படத்தில் விஜய்யுடன் நடித்திருந்தாலும் இந்த படத்தில் நடிக்கும்போது அவரிடம் இருந்து தான் பல விஷயங்களை கற்று கொண்டதாக தெரிவித்தார்.
குறிப்பாக தன்னுடைய காட்சியையும் துணை நடிகர்கள் காட்சியையும் கூர்ந்து கவனிக்கும் விஜய், பெரும்பாலான காட்சிகளை ஒரே டேக்கில் ஓகே செய்துவிடுவதை தான் ஆச்சரியமாக பார்த்ததாகவும், இவ்வளவுக்கும் அவர் அதிக ரிகர்சல் எடுத்து கொள்வதும் இல்லை என்றும் கூறினார். இயக்குனருக்கு என்ன தேவையோ அதை சரியாக கொடுக்கும் தன்மை அவரிடம் இருப்பதால்தான் அவர் உச்சத்தில் இருப்பதாகவும் செளந்திரராஜா தெரிவித்தார்.
'தளபதி 63' படத்தை அடுத்து 'கள்ளன்' மற்றும் 'அறுவா சண்டை' ஆகிய படங்களில் செளந்திரராஜா வில்லன் வேடத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments