விஜய் பிறந்த நாளை எங்கு கொண்டாடினார்? முக்கிய தகவல்

  • IndiaGlitz, [Wednesday,June 22 2016]

இளையதளபதி விஜய் இன்று 'விஜய் 60' படக்குழுவினர்களுடன் தனது 42வது பிறந்த நாளை கொண்டாடினார் என சற்று முன்னர் பார்த்தோம்., இந்த பிறந்த நாள் விழாவில் இயக்குனர், பரதன், கீர்த்திசுரேஷ், சதீஷ் உள்பட பலர் கலந்து கொண்டதாகவும் படக்குழுவினர் முன்னிலையில் அவர் கேக் வெட்டியதாகவும் கூறப்பட்டது.

ஆனால் தற்போது வெளிவந்துள்ள புதிய தகவலின்படி விஜய் 60' படக்குழுவினர்களுடன் இன்று விஜய் பிறந்தநாள் கொண்டாடவில்லை என்று கூறப்படுகிறது. இந்த தகவலை உறுதி செய்யும் வகையில் 'இந்த பிறந்த நாளில் உங்களை மிஸ் பண்ணுகிறோம் விஜய் சார்' என நடிகர் சதீஷ் தனது சமூகவலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார்.

உண்மையில் விஜய் இன்று தனது பிறந்த நாளை எங்கு கொண்டாடினார் என்பது தெரியவில்லை. அமெரிக்காவில் குடும்பத்தினர்களுடன் சென்று இருக்கலாம் என்றும் அல்லது சென்னையில் கொண்டாடியிருக்கலாம் என்று கூறப்படுகிறது.