திமுக பேரணியில் விஜய் பங்கேற்பாரா? எஸ்.ஏ.சி பதில்
Send us your feedback to audioarticles@vaarta.com
மத்திய அரசு சமீபத்தில் கொண்டுவந்த குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் நாளை பிரம்மாண்டமான பேரணி ஒன்றை நடத்த உள்ளது. இந்த பேரணிக்கு ஆதரவு தரும்படி அரசியல் கட்சிகள், சமூக அமைப்புகள் மற்றும் நடிகர் சங்கம் உள்ளிட்டவைகளுக்கு முக ஸ்டாலின் அவர்கள் அழைப்பு விடுத்தார். இது குறித்து அவர் அனைத்து அமைப்புகளுக்கும் தனது கைப்படவே கடிதம் எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் நடிகர் சங்கம் இந்த பேரணியில் கலந்து கொள்ளாது என நேற்று அறிவிக்கப்பட்டது. இருப்பினும் நடிகர்கள் தங்கள் சொந்த விருப்பத்தின் பேரில் பேரணியில் கலந்து கொண்டால் அதில் ஒரு பிரச்சனையும் இல்லை என்றும் நடிகர் சங்க துணை தலைவர் கருணாஸ் பேட்டி ஒன்றில் தெரிவித்திருந்தார்.
அதேபோல் மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவர் கமலஹாசனும் அவரது கட்சியும் இந்த பேரணியில் கலந்து கொள்ளாது என அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து இன்று நடைபெற்ற விநியோகஸ்தர் சங்க தேர்தலில் வாக்களித்த தளபதி விஜய்யின் தந்தையும் பிரபல இயக்குனருமான எஸ்ஏ சந்திரசேகர் அவர்களிடம் ’திமுக நடத்தும் பேரணியில் விஜய் கலந்து கொள்வாரா? என செய்தியாளர்கள் கேட்டனர். அதற்கு பதிலளித்து பேசிய எஸ்ஏ சந்திரசேகர் அவர்கள் ’விஜய் தற்போது ஊரில் இல்லை என்றும் கர்நாடக மாநிலத்தில் படப்பிடிப்பில் இருக்கிறார் என்றும் அதனால் அவர் திமுக பேரணியில் பங்கேற்க வாய்ப்பு இல்லை' என்றும் கூறியுள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments