சிறந்த சர்வதேச நடிகர் போட்டியில் 'மெர்சல்' விஜய்

  • IndiaGlitz, [Saturday,July 21 2018]

தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் அட்லி இயக்கத்தில் ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் தயாரித்த 'மெர்சல்' திரைப்படம் கடந்த ஆண்டு தீபாவளி தினத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இந்த படத்திற்கு ஏற்கனவே ஒருசில விருதுகள் கிடைத்துள்ள நிலையில் தற்போது IARA விருதுக்கு சென்றுள்ளது.

இந்த விருதுகள் வழங்கும் விழா வரும் செப்டம்பர் மாதம் 22ஆம் தேதி லண்டலில் நடைபெறவுள்ளது. இந்த விழாவில் விருதுக்குரிய போட்டியாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

இந்த விழாவில் விஜய் நடித்த 'மெர்சல்' திரைப்படம் திரையிடப்படவுள்ள நிலையில் இரண்டு விருதுகளுக்கு 'மெர்சல் படத்தில் நடித்த விஜய்யின் பெயர் நாமினேட் செய்யப்பட்டுள்ளது. 'சிறந்த நடிகர்' மற்றும் 'சிறந்த சர்வதேச நடிகர்' ஆகிய விருதுகளுக்கு விஜய்யின் பெயர் நாமினேட் செய்யப்பட்டுள்ளது. இந்த இரண்டு விருதுகளும் விஜய்க்கு கிடைக்க நமது அட்வான்ஸ் வாழ்த்துக்கள்