close
Choose your channels

அரசியல் கட்சி பெயரை மாற்றுகிறாரா விஜய்? புதிய பெயர் என்ன?

Saturday, February 17, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தளபதி விஜய் சமீபத்தில் தமிழக வெற்றி கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கிய நிலையில் தற்போது இந்த கட்சியின் பெயரில் சிறு மாற்றம் செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த சில ஆண்டுகளாகவே விஜய் அரசியலுக்கு வருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர் செய்த நலத்திட்ட உதவிகள் காரணமாக விரைவில் அவர் அரசியலுக்கு வருவார் என்று உறுதி செய்யப்பட்டது. இந்த நிலையில் சமீபத்தில் விஜய் அதிகாரபூர்வமாக தனது அரசியல் வருகையை அறிவித்தார் என்பதும் அவர் தமிழக வெற்றி கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கி இருப்பதாக அறிக்கை ஒன்றின் மூலம் தெரிவித்தார் என்பதையும் பார்த்தோம்.

2024 ஆம் ஆண்டு நடைபெறும் பாராளுமன்ற தேர்தலில் போட்டியில்லை என தெளிவாக கூறிய விஜய், 2026 தான் தங்கள் இலக்கு என்றும் தெரிவித்திருந்தார். அதற்காக அவர் ’தளபதி 69’ படத்துடன் சினிமாவுக்கு முழுக்கு போட்டுவிட்டு முழு நேர அரசியலில் குதிக்க இருப்பதாகவும் அறிவித்த நிலையில் அடுத்த இரண்டு ஆண்டுகளில் அவரது கட்சி பட்டி தொட்டி எங்கும் பரவ அவர் தீவிர முயற்சி செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் தமிழக வெற்றி கழகம் என்ற அரசியல் கட்சி பெயரில் ’க்’ என்ற எழுத்து வரவேண்டும் என்று சிலர் சுட்டி காட்டிய நிலையில் அந்த எழுத்துப் பிழையை திருத்த அவர் முடிவு செய்துவிட்டதாக கூறப்படுகிறது. நியாயமாக வைக்கப்படும் விமர்சனங்களை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று விஜய் கூறியதாகவும் இதையடுத்து ’தமிழக வெற்றிக்கழகம்’ என்ற பெயர் மாற்றம் குறித்து அறிவிப்பு இன்னும் ஒரு நாளில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment