close
Choose your channels

'தளபதி 62' படத்தில் விஜய்யின் லுக் எப்படி இருக்கும்?

Friday, January 19, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தளபதி விஜய் நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கவுள்ள 'விஜய் 62' படத்தின் பூஜையுடன் கூடிய படப்பிடிப்பு இன்று சிறப்பாக நடைபெற்ற நிலையில் இன்று வெளியாகியுள்ள தொடக்கவிழா புகைப்படத்தில் இருந்து விஜய்யின் கெட்டப்பை ஓரளவுக்கு ஊகிக்க முடிகிறது.

கடந்த சில தினங்களுக்கு முன் இந்த படத்தின் போட்டோஷூட் புகைப்படங்கள் வெளியானபோது அதில் விஜய் கோட் சூட்டுடன் ஸ்டைலாக இருந்தார். ஆனால் இன்று வெளியாகியுள்ள பூஜை ஸ்டில்லில் பாதி ட்ரிம் செய்த வெள்ளை கலந்த தாடி, காதில் தோடு, சாதாரண ஹேர்ஸ்டைலில் விஜய்யின் லுக் உள்ளது.

எனவே இந்த படத்திலும் விஜய் இரண்டு வேடங்களில் நடிக்கின்றாரா? அல்லது ஒரே கேரக்டரில் இரண்டு கெட்டப்புகளில் நடிக்கின்றாரா? என்பது போக போக வரும் செய்திகளில் இருந்து தெரியவரும்

இந்த ஆண்டு தீபாவளி தினத்தில் வெளிவரவுள்ள இந்த படம் இந்த ஆண்டின் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்குரிய படங்களில் ஒன்றாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment