டாம் குரூஸ் - விஜய் இடையே இருக்கும் அபூர்வ ஒற்றுமை!
Send us your feedback to audioarticles@vaarta.com
பிரபல ஹாலிவுட் நடிகர் டாம் குரூஸ் அவர்களுக்கும் தளபதி விஜய் அவர்களுக்கும் இடையே ஒரு அபூர்வ ஒற்றுமை இருப்பதாக சமூகவலைதளங்களில் வலம் வந்து கொண்டிருக்கும் செய்தியால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
‘மிஷன் இம்பாஸிபிள்’ உள்பட பல ஹாலிவுட் திரைப்படங்களில் நடித்து உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்களைக் கொண்டவர் டாம் குரூஸ். அதைப்போலவே தமிழகம் மட்டுமின்றி இந்தியா முழுவதிலும், உலகின் பல நாடுகளிலும் தளபதி விஜய்க்கு ரசிகர்கள் உண்டு என்பதும் குறிப்பிடத்தக்கது. இவருடைய பிறந்த நாளை தமிழகத்தில் ஒரு திருவிழா போல் கொண்டாடுவார்கள் என்பதை சமீபத்தில் பார்த்தோம்.
இந்த நிலையில் டாம் குரூஸ் மற்றும் விஜய் இடையே ஒரு அபூர்வ ஒற்றுமை இருக்கும் தகவலை சமூகவலைதளத்தில் நெட்டிசன்கள் பகிர்ந்து வருகின்றனர். டாம்குரூஸ் அவர்களுக்கு அமெரிக்காவில் ஒரு அழகிய பீச் ஹவுஸ் ஒன்று உள்ளது. இந்த வீட்டின் புகைப்படங்கள் அவ்வப்போது சமூக வலைதளங்களில் வெளிவந்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தும்
இந்த நிலையில் தற்போது தளபதி விஜய் நீலாங்கரையில் கட்டிக்கொண்டிருக்கும் புதிய வீடு, அச்சு அசலாக டாம் குரூஸ் வீடு போலவே இருப்பதாகவும், இரண்டு வீடுகளின் புகைப்படங்களையும் நெட்டிசன்கள் வெளியிட்டு ஆச்சரியப்படுகின்றனர். நடிகர் விஜய் அமெரிக்கா சென்றபோது டாம் குரூஸ் வீட்டை பார்த்து அதே போல் கட்டவேண்டும் என்ற நினைத்தாரா? அல்லது தற்செயலாக டாம் குரூஸ் வீடும் போலவே விஜய் வீடும் ஒற்றுமையாக இருக்கிறதா? என்பது தெரியவில்லை. ஆனால் இரண்டு வீட்டின் மாடல்களும் ஒரே மாதிரி இருப்பதை நெட்டிசன்கள் சுட்டிக் காட்டி வருகின்றனர்
நீலாங்கரையில் விஜய் கட்டிக்கொண்டிருக்கும் வீட்டில் பல்வேறு தொழில்நுட்ப வசதிகள் இருப்பதாகவும், குறிப்பாக விஜய் மகள் பேட்மிண்டன் விளையாடுவதற்காக பேட்மிட்டன் கோர்ட் ஒன்றும் உள்ளதாக கூறப்படுகிறது. விரைவில் இந்த புதிய வீட்டுக்கு விஜய் தனது குடும்பத்துடன் குடிபுகுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments