விஜய் படங்களின் காஸ்ட்யூம் டிசைனர் திருமணம்: வைரலாகும் புகைப்படங்கள்!
Send us your feedback to audioarticles@vaarta.com
தளபதி விஜய் உள்பட பிரபலங்களுக்கு காஸ்டியூம் டிசைனராக பணிபுரிந்த சத்யாவின் திருமணம் நடைபெற்றதை அடுத்து அவருக்கு திரையுலகினர் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
தளபதி விஜய் நடித்த ’தெறி’ மற்றும் ’பைரவா’, சிவகார்த்திகேயன் நடித்த ’மான்கராத்தே’ ஆர்யா நடித்த ’ராஜாராணி’ உள்பட பல திரைப்படங்களுக்கு காஸ்ட்யூம் டிசைனராக பணி புரிந்தவர் என்.ஜே.சத்யா. இவர் தனது நீண்ட நாள் காதலியான கோகிலா என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
இந்த திருமணம் கோவையில் உள்ள கோவிலில் நடைபெற்ற நிலையில் இருதரப்பின் உற்றார், உறவினர்கள், நண்பர்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் பலர் கலந்து கொண்டு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
நடிகரும் இயக்குனருமான சசிகுமார் இந்த திருமணத்தில் கலந்து கொண்டதன் புகைப்படங்கள் அவருடைய சமூக வலைத்தளத்தில் வைரலாக வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
உங்கள் இல்லறம் இனிதே தொடர வாழ்த்துகிறேன்
— M.Sasikumar (@SasikumarDir) March 14, 2022
Wish you a Happy Married Life @NjSatz #gokila ?? pic.twitter.com/IdNXVTVDgT
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout