close
Choose your channels

வெங்கட் பிரபுவை காணவில்லை.. விஜய் பட வில்லன் நடிகர் பதிவால் பரபரப்பு..!

Monday, January 29, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

வெங்கட் பிரபுவை காணவில்லை என விஜய் படத்தில் வில்லனாக நடித்த நடிகர் தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான வெங்கட் பிரபு தற்போது தளபதி விஜய் நடித்துவரும் ’கோட்’ என்ற படத்தை இயக்கி வருகிறார் என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் வெங்கட் பிரபு இயக்கத்தில் பிரபல கன்னட நடிகர் கிச்சா சுதீப் நடிப்பில் ஒரு திரைப்படம் உருவாக இருப்பதாக கடந்த ஒரு ஆண்டுக்கு முன்னர் அறிவிக்கப்பட்டது.

விஜய் நடித்த ’புலி’ உள்பட ஒரு சில தமிழ் படங்களிலும் நடித்த கிச்சா சுதீப் நடிப்பில் இந்த படத்தை தமிழ், கன்னடம், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என பான் இந்தியா திரைப்படமாக உருவாக்க திட்டமிடப்பட்டது.

இந்த நிலையில் இந்த படத்தை அப்படியே கிடப்பில் போட்டுவிட்டு வெங்கட் பிரபு அடுத்தடுத்த படங்களில் தீவிரம் காட்டினார். குறிப்பாக ’கோட்’ படத்தில் தற்போது அவர் பிசியாக இருக்கிறார்.

இந்த நிலையில் ரசிகர் ஒருவர் கிச்சா சுதீப் இடம், ‘நீங்கள் வெங்கட்பிரபு இயக்கத்தில் நடிக்க இருந்த படம் என்ன ஆனது? என்று கேட்க அதற்கு ’வெங்கட் பிரபுவை காணவில்லை’ என்றும் ஆனால் அதே நேரத்தில் தனது அடுத்த படத்தை விக்ரம் ரோனா’ இயக்குனர் அனுப் பண்டாரி இயக்க இருப்பதாகவும் இந்த படம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கிச்சா சுதீப் தெரிவித்துள்ளார். இந்த பதிவு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment