விஜய் பட வில்லன் நடிகரின் நிர்வாண புகைப்படங்கள்.. 'நான் யார்'என அறிய முயற்சிப்பதாக அறிவிப்பு..!

  • IndiaGlitz, [Sunday,December 10 2023]

’நான் யார் என்பதை அறிய முயற்சிக்கும் ஒரு பகுதியாக ஒரு வாரம் இமயமலை காட்டில் இருக்கிறேன்’ என்று விஜய் படத்தில் நடித்த வில்லன் நடிகர் தனது நிர்வாண புகைப்படங்களை வெளியிட்டு இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

விஜய் நடித்த ’துப்பாக்கி’ உட்பட ஒரு சில தமிழ் படங்களிலும் ஏராளமான ஹிந்தி படங்களிலும் நடித்தவர் நடிகர் வித்யூத் ஜமால். இவர் தொடர்ச்சியாக இமயமலைக்கு செல்லும் வழக்கத்தை கொண்டிருக்கும் நிலையில் தற்போது அவர் இமயமலையில் இருக்கும் புகைப்படங்களை பதிவு செய்துள்ளார். ஆனால் இந்த புகைப்படங்கள் முழுக்க முழுக்க நிர்வாணமாக இருப்பது தான் ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த பதிவில் அவர் கூறியிருப்பதாவது:

ஆடம்பர வாழ்க்கையில் இருந்து விலகி சில நாட்கள் காட்டில் வாழ்ந்து வருகிறேன், என் தனிமையை கண்டு நானே மகிழ்ச்சி அடைகிறேன், நான் யார் என்பதை அறிய முயற்சிக்கும் ஒரு பகுதியாக இந்த பயணத்தை நான் நினைக்கிறேன், நான் யார் என்பதை அறிவதற்கான முதல் படி இது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் ‘இயற்கை வழங்கும் அமைதியான, ஆடம்பரங்கள் இல்லாமல், என்னை நானே தற்காத்துக் கொண்டேன். வெளியே நான் வசதியாக இருந்தாலும், இயற்கையான அதிர்வெண்ணுக்கு இசைவாக நான் இங்கு இருக்கிறேன். செயற்கைக்கோள், டிஷ் ஆன்டனாவாக என்னை நான் கற்பனை செய்து கொண்டு மகிழ்ச்சியுடன் கடந்த சில நாட்களாக இருக்கிறேன். என்னை சுற்றி நான் ஒரு ஆற்றலை உருவாக்கிக் கொண்டு அதன் பிறகு வீடு திரும்ப இருக்கிறேன்.

என் வாழ்க்கையின் ஒரு புதிய அத்தியாயத்தை அனுபவிக்க தயாராக இருக்கிறேன். இந்த தனிமை மனதிற்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது’ என்ற பகிர்ந்து உள்ளார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

More News

கவின் அடுத்த படத்தில் இணைந்த நடிப்பு அரக்கன்.. வேற லெவல் எதிர்பார்ப்பு..!

நடிகர் கவின் நடிக்க இருக்கும் அடுத்த திரைப்படத்தில் நடிப்பு அரக்கன் எஸ்ஜே சூர்யா இணைய உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளதால் இந்த படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.  

டிஸ்னி+ ஹாட்ஸ்டாரின் மலையாள ஒரிஜினல் சீரிஸ்: 'பேரில்லூர் பிரீமியர் லீக்' ஸ்ட்ரீமிங் தேதி அறிவிப்பு..!

டிஸ்னி+ ஹாட்ஸ்டார் சமீபத்தில் அதன் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட மலையாள ஒரிஜினல் சீரிஸான ​​“பேரில்லூர் பிரீமியர் லீக்” சீரிஸின் டிரெய்லரை வெளியிட்டது. அரசியலை இதயம் வருடும்

சீரியல் நடிகையை திருமணம் செய்து கொண்ட ரெடின் கிங்ஸ்லி.. வைரல் புகைப்படங்கள்..!

தமிழ் திரை உலகின் காமெடி நடிகர்களில் ஒருவரான ரெடின் கிங்ஸ்லி, சீரியல் நடிகையை திருமணம் செய்து கொண்ட நிலையில் திருமண புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன.  

விஷ்ணு தான் எல்லாத்துக்கும் காரணம்.. கமல் முன் போட்டு உடைக்கும் பூர்ணிமா..!

 பிக் பாஸ் நிகழ்ச்சி இன்று 70 வது நாளாக நடைபெற இருக்கும் நிலையில் இன்றைய அடுத்த ப்ரோமோவில் உங்கள் வெற்றிக்கு தடையாக இருக்கும் போட்டியாளர் யார் என கமல்ஹாசன் கேட்க

இரட்டையராக பிறந்த சகோதரியை தேடும் கதை: 'மதிமாறன்' திரைப்பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு !!

ஜி.எஸ் சினிமா இன்டர்நேஷனல்  தயாரிப்பில் அறிமுக இயக்குனர் மந்த்ரா வீரபாண்டியன் இயக்கத்தில், இவானா, வெங்கட் செங்குட்டுவன் முதன்மைப் பாத்திரத்தில் நடிக்க , மாறுபட்ட திரில்லர் டிராமாவாக