லாஸ்லியா நாயகியாக நடிக்கும் படம்.. விஜய் பட தயாரிப்பாளரின் அதிரடி அறிவிப்பு..!
Send us your feedback to audioarticles@vaarta.com
விஜய் உட்பட பல பிரபலங்களின் படங்களை தயாரித்த தயாரிப்பு நிறுவனம் தனது அடுத்த படத்தின் அறிவிப்பை வெளியிட்டுள்ள நிலையில் அந்த படத்தின் நாயகியாக பிக்பாஸ் லாஸ்லியா நடிக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தளபதி விஜய் நடிப்பில், அட்லி இயக்கத்தில் உருவான ’மெர்சல்’ திரைப்படத்தை தயாரித்த ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் விரைவில் ஒரு படத்தை தயாரிக்கும் அறிவிப்பை வெளியிடும் என்று சில நாட்களாக செய்திகள் வெளிவந்து கொண்டிருந்தன.
இந்த நிலையில் ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் அடுத்த படத்தின் பர்ஸ்ட் போஸ்டர் வெளியாகி உள்ளது. இந்த படத்திற்கு ’மிஸ்டர் ஹவுஸ் கீப்பிங்’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ள நிலையில் இந்த படத்தில் ஹரி பாஸ்கர் நாயகனாகவும், லாஸ்லியா நாயகியாக நடிக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நடிகை லாஸ்லியா ஏற்கனவே ’பிரண்ட்ஸ்’ மற்றும் ’கூகுள் குட்டப்பா’ ஆகிய படங்களில் நடித்த நிலையில் தற்போது அவர் ’மிஸ்டர் ஹவுஸ் கீப்பிங்’ படத்தில் நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஓஷோ வெங்கட் இசையில், குலோத்துங்க வர்மன் ஒளிப்பதிவில், ராமசுப்பு படத்தொகுப்பில் இந்த படம் உருவாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நீண்ட இடைவேளைக்கு பிறகு ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தின் மற்ற தகவல்கள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Very happy to release the first look of my beloved producer @ThenandalFilms’ next film #MrHousekeeping ♥️
— atlee (@Atlee_dir) July 12, 2024
Happy to see the fresh talents on screen! Wishing the team loads of success
Written & Directed by: #ArunRavichandran
Produced by: @ThenandalFilms @invatemedia @Hemarukmani1… pic.twitter.com/swoaHH6s3w
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com